விஜய் கடைசி படம்னா எல்லாரும் தியேட்டர் கொடுக்க மாட்டாங்க!.. திருப்பூர் சுப்ரமணியம் நெத்தியடி!..

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம்னு சொல்லிட்டுத் திரியும் நடிகர் விஜய் இதுவரை தெலுங்கு, கன்னட நடிகர்கள் போல 1000 கோடி வசூல் எல்லாம் பண்ணவே இல்லை.;

By :  SARANYA
Published On 2025-05-12 20:54 IST   |   Updated On 2025-05-12 20:54:00 IST

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம்னு சொல்லிட்டுத் திரியும் நடிகர் விஜய் இதுவரை தெலுங்கு, கன்னட நடிகர்கள் போல 1000 கோடி வசூல் எல்லாம் பண்ணவே இல்லை. இனிமேலும், அவரால் அதெல்லாம் சாத்தியமே இல்லை என திருப்பூர் சுப்ரமணியம் நெத்தியடியாக பேசியுள்ளார்.

லியோ படத்தை பெரிதும் எதிர்பார்ப்புடன் பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், அந்த படம் வெறும் 600 கோடி மட்டுமே வசூல் செய்ததாக கூறப்பட்டது. மேலும், 2ம் பாதி ரசிகர்களை சோதித்து எடுத்த நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களும் கடுப்பாகி விட்டனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடிக்க அஜித் பட ரெஃபரன்ஸ் எல்லாம் வைத்து எடுத்தும் வெறும் 400 கோடி தான் படம் வசூல் செய்தது.


லியோ படத்துக்குப் பிறகு மார்க்கெட் மொத்தமாக குறைந்துவிட்டது என்கின்றனர். மேலும், கோட் படத்தை பார்த்து கடுப்பாக உள்ள ரசிகர்கள் விஜய்யின் கடைசி படத்தில் முழுக்க முழுக்க அரசியல் கருத்துகள் நிரம்பி வழிந்தால் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடுமா என்பது கேள்விக்குறி தான்.

திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் அளித்த பேட்டியில், விஜய்யின் கடைசி படம் என்பதற்காக எல்லாம் ஒட்டுமொத்த தியேட்டர் ஓனர்களும் தியேட்டர்களை தூக்கி கொடுக்க மாட்டார்கள். சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் வருகிறது. இன்றைய தேதியில் அவரும் முன்னணி நடிகர் தான். எப்படி வாரிசு படமும் துணிவு படமும் பொங்கலுக்கு வரும் போது தியேட்டர்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டதோ அதே போலத்தான் அடுத்த வருஷமும் நடக்கும். அதனால், பெரிய வசூல் எல்லாம் ஜன நாயகன் பண்ணுமா என்பது சந்தேகம் தான் என்றுள்ளார்.

Tags:    

Similar News