2024ல் வசூலை வாரிக்குவித்த டாப் 10 படங்கள்... லிஸ்ட் ரெடி... படிக்க ரெடியா?

By :  Sankaran
Update: 2024-12-11 08:15 GMT

2024ல் ஆரம்பத்தில் எந்த ஒரு படமும் சொல்லும்படியாக அமையவில்லை. பெரிய அளவில் வசூலை வாரிக் குவிக்கவில்லை. அமரன் படம் தான் ஆறுதலாக இருந்தது. ஆனால் இந்த லிஸ்ட்ல பிளாப்னு சொல்லிட்டு ஏன் போட்டுருக்குன்னு கேட்கலாம். என்னன்னா அந்தப் படத்தோட உலகளவிலான வசூல் அதிகம். அதை அடிப்படையாகக் கொண்டு தான் லிஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் டாப் 10 பட்டியலைப் பார்க்கலாமா...

கேப்டன் மில்லர் - அயலான்

10வது இடத்தில் கேப்டன் மில்லர் இருக்கிறது. 50 கோடி பட்ஜெட்ல எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் 44.17 கோடியைக் கலெக்ஷன் பண்ணியிருக்கு. உலகளவில் 76.11 கோடியை வசூலித்துள்ளது. இது ஒரு சுமார் ரகம். 9வது இடத்தில் அயலான். 2வருஷமாக கிடப்பில் போடப்பட்ட படம். அப்புறம் வெளியானது. காமெடி பெரிய அளவில் கவரவில்லை. 80கோடி பட்ஜெட். தமிழகத்தில் 56.55கோடியும், உலகளவில் 81.23கோடியும் வசூலித்துள்ளது. இதுவும் சுமார் ரகம் தான்.

அரண்மனை 4

8வது இடத்தில் அரண்மனை 4 உள்ளது. இந்தப் படத்தில் தமன்னா பாடல் நல்லா ஹிட் ஆனது. 40 கோடி பட்ஜெட். தமிழகத்தில் 66.32 கோடியும், உலகளவில் 102.88கோடியும் வசூலித்துள்ளது. இது ஒரு பிளாக்பஸ்டர் மூவி.

maharaja

மகாராஜா

7வது இடத்தில் மகாராஜா படம் உள்ளது. இந்தப் படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் ஏற்கனவே குரங்கு பொம்மைப் படத்தை இயக்கியவர். சீனாவிலும் இந்தப்படம் சக்கை போடு போட்டு வருகிறது. 20கோடி பட்ஜெட். தமிழகத்தில் 48.65கோடியும், உலகளவில் 107.92கோடியும் வசூலித்துள்ளது. இது ஒரு பிளாக்பஸ்டர் மூவி.

கங்குவா

6வது இடத்தில் கங்குவா படம் வருகிறது. சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடித்த பிரம்மாண்டமான படம். நெகடிவ் விமர்சனங்கள் வசூலைப் பாதித்தது. ஆனாலும் படம் நல்லா இருந்தால் ஓடியிருக்கும். பட்ஜெட் 350 கோடி. தமிழகத்தில் 32.48கோடியும், உலகளவில் 112.72கோடியும் வசூலித்துள்ளது. இந்தப் படம் பெரிய நஷ்டம்தான். என்றாலும் இதன் உலகளவில் வசூலைப் பொருத்து 6வது இடத்தைப் பிடித்துள்ளது.

ராயன் - இந்தியன் 2


5வது இடத்தைப் பிடித்து இருப்பது ராயன். தனுஷ் நடித்து இயக்கிய படம். கலவையான விமர்சனங்களை சந்தித்தது. 85 கோடி பட்ஜெட். தமிழகத்தில் 80.47 கோடியும், உலகளவில் 158.71கோடியும் வசூலித்துள்ளது. இது ஒரு சூப்பர்ஹிட் படம். 4வது இடத்தைப் பிடித்து இருப்பது இந்தியன் 2. கமல் நடிப்பில் லைகா தயாரித்து ஷங்கர் இயக்கிய படம். ரொம்பநாள் தயாரிப்பில் இருந்து கிடப்பில் போடப்பட்ட படம். இந்தப் படத்தின் கன்டென்ட் ஓல்டு, கிரிஞ்ச், மேக்கப் காரணமாக பெரிய வரவேற்பைப் பெறாமல் போனது. பட்ஜெட் 250 கோடி. தமிழகத்தில் 60.28கோடியும், உலகளவில் 169.40கோடியும் பெற்றுள்ளது. இது ஒரு பிளாப் படம்.

வேட்டையன்

3வது இடத்தில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப்பச்சன், மஞ்சுவாரியர் நடிப்பில் உருவான படம் வேட்டையன். இது என்கவுண்டருக்கு எதிரானது. படத்தில் தவறான என்கவுண்டர் பண்ணியது ஹீரோ ரஜினி. இது மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படத்தின் பட்ஜெட் 310 கோடி. தமிழகத்தில் 108.65கோடியும், உலகளவில் 264.40கோடியும் வசூலித்துள்ளது. இந்தப் படம் ஒரு பிளாப் மூவி.

amaran

அமரன்

2வது இடத்தைப் பிடித்து இருப்பது கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த படம் அமரன். மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக், சொல்லப்பட்ட விதம் ரசிகர்களைக் கவர்ந்தது. 120கோடி பட்ஜெட்டில் தயாரானது. தமிழகத்தில் 150கோடியும், உலகளவில் 314 கோடியும் வசூலித்துள்ளது. இது வெறும் பிளாக்பஸ்டர் கிடையாது. ஆல்டர் பிளாக் பஸ்டர் மூவி.

கோட்

முதல் இடத்தைப் பிடிப்பது கோட் படம். தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இது கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆனாலும் நல்ல வசூலைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட் 400கோடி. தமிழகத்தில் மட்டும் 219.93கோடியும், உலகளவில் 462.85கோடியும் வசூலித்துள்ளது. இது ஒரு ஹிட் படம்.

Tags:    

Similar News