2025-ல் ரிலீஸாகும் பெரிய நடிகர்களின் படங்கள்.. ஜனவரி டு டிசம்பர் வரை.. லிஸ்ட் பெருசா இருக்கே!..
2025 ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசை கட்டி இறங்குகின்றன. அதிலும் பல நடிகர்களின் இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெளியாக இருப்பது மேலும் சிறப்பு. அப்படி ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை வெளியாக இருக்கும் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
இந்த ஆண்டு நடிகர் அஜித்தின் 2 திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றது. கடந்த இரண்டு வருடங்களாக அஜித்தின் எந்த திரைப்படம் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தின் சென்சார் முடிந்துள்ளது. மேலும் படம் ஜனவரி 26 அல்லது ஜனவரி 30 ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருக்கின்றது
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் வீரதீரசூரன் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனவரி 30 ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகின்றது. மேலும் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜீனி திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஏப்ரல் 10ம் தேதி அதாவது தமிழ் புத்தாண்டை குறிவைத்து இரண்டு பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகின்றன. ஏற்கனவே தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது என்கின்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள்.
மே மாதம் அதாவது கோடை விடுமுறையை குறி வைத்து மூன்று திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் மே 1ம் தேதி ரெட்ரோ திரைப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் குபேரா திரைப்படம் ஜூன் அல்லது மே மாதம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனவும் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் வா வாத்தியாரே திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி வரும் தக் லைப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கு அடுத்ததாக செப்டம்பர் மாதம் பூஜை விடுமுறையை குறி வைத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்கேப் 23 திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 69 திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது. ஏற்கனவே படம் ஆரம்பிக்கும் போதே 2025 தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று பட குழுவினர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் சூர்யா 45 திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆக மொத்தம் இந்த ஆண்டு அஜித், தனுஷ், சூர்யா, ஜெயம் ரவி ஆகியோரின் இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. மற்ற பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் தலா 1 இந்த வருடம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.