ரீ-ரிலீஸ் 2.. புது படங்கள் மொத்தம் 8.. நாளைக்கு வெளியாகும் 10 படங்கள்!....

டிராகன் படத்திற்கு பின் எதிர்பார்பை ஏற்படுத்தும் எந்த திரைப்படமும் கடந்த வாரங்களில் வெளியாகவில்லை. அறிவழகனின் சப்தம், ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் போன்ற படங்கள் ஓரளவுக்கு எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியது. இதில், சப்தம் படம் சொன்ன நேரத்தில் ரிலீஸ் ஆகவில்லை. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு காலையில் வெளியாக வேண்டிய படம் மதியம் வெளியானது. படம் நன்றாக இருக்கிறது என விமர்சனம் வந்தாலும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் முதன் முதலில் தயாரித்து நடித்து வெளியான கிங்ஸ்டன் படம் முழுக்க முழுக்க கடலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. படம் வெளியாகி ஒரு வாரத்தில் இந்தியாவில் மட்டும் 4.45 கோடி வசூலை இப்படம் பெற்றதாக சொல்லப்பட்டது. ஜிவி பிரகாஷுக்கு இப்படம் லாபமா நஷ்டமா என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.

ஒவ்வொரு வாரம் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் புதிய படங்கள் வெளியாகி வருகிறது. சின்ன நடிகர்கள் படங்கள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே வெளியாகும். அந்தவகையில், மார்ச் 14ம் தேதியான நாளை 8 புதிய படங்கள் வெளியாகவுள்ளது.
ஸ்வீட் ஹார்ட், பெருசு, ராபர், வருணன், மாடர்ன் கொடை விழா, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், குற்றம் உறை, டெக்ஸ்டர் ஆகிய 8 புதிய தமிழ் படங்கள் நாளை தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இவற்றில் பெரும்பாலானவற்றில் அறிமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், அறிமுக இயக்குனர்களே இந்த படங்களை இயக்கி இருக்கிறார்கள்.

ஒருபக்கம், ஏற்கனவே வெளியான 2 பழைய படங்கள் நாளை தியேடரில் ரீ-ரிலீஸ் ஆகிறது. அவற்றில் ஒன்று சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன். 2016ம் வருடம் வெளியாகி ஹிட் அடித்த இந்த திரைப்படம் 8 வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது.
அதேபோல், ஜெயம் ரவி நடித்து 2004ம் வருடம் வெளிவந்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படமும் 21 வருடங்கள் கழித்து நாளை மீண்டும் ரீ-ரிலிஸ் செய்யப்படவிருக்கிறது. இது ஏற்கனவே தெலுங்கில் ரவி தேஜா நடித்து ஹிட் அடித்த படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 10 படங்களில் எந்தெந்த படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடிக்கும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.