நயன்தாரா கிரேட் எஸ்கேப்!.. கமல்ஹாசனுக்கு ஹாட்ரிக் தோல்வியை கொடுத்த த்ரிஷா!.. ‘டல் லைஃப்’

தக் லைஃப் படத்தில் இருந்து துல்கர் சல்மான், ரவி மோகன் உள்ளிட்ட நடிகர்கள் கம்பியை நீட்ட, சிம்பு உள்ளே வருகிறார் என்றதுமே நயன்தாரா நடிக்க மறுத்து விட்டதாக கூறப்பட்டது.;

By :  SARANYA
Published On 2025-06-07 19:04 IST   |   Updated On 2025-06-07 19:04:00 IST

கமல்ஹாசன் உடன் இதுவரை ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்காமல் தொடர்ந்து தவிர்த்து வருகிறார் நயன்தாரா. மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கிடைத்தால் நடிப்பேன் என நயன்தாரா விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து பணியாற்றும் தக் லைஃப் படத்தில் முதலில் நயன்தாரா தான் ஹீரோயின் என்றெல்லாம் கூறப்பட்டன. ஆனால், இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான், ரவி மோகன் உள்ளிட்ட நடிகர்கள் கம்பியை நீட்ட, சிம்பு உள்ளே வருகிறார் என்றதுமே நயன்தாரா நடிக்க மறுத்து விட்டதாக கூறப்பட்டது.


ஆனால், உண்மையாகவே படத்தின் கதையை கேட்ட பின்னர், தான் நயன்தாரா இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்து நம்ம பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என நினைத்திருப்பார் என சமூக வலைதளத்தில் தற்போது நயன்தாரா ரசிகர்கள் த்ரிஷாவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

நடிகை த்ரிஷாவுக்கும் கமல்ஹாசனுக்கும் செட்டே ஆகாது என்று தான் தெரிகிறது. இதுவரை அவருடன் இணைந்து நடித்த 3 படங்களும் படுதோல்வியையே சந்தித்துள்ளன. கமல்ஹாசன் உடன் முதன் முதலில் 2010ம் ஆண்டு த்ரிஷா இணைந்து மன்மதன் அம்பு படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் ஃபிளாப் படம் தான்.


அதன் பின்னர், 2015ல் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா நடித்த தூங்காவனம் படமும் தோல்விப் படமாகவே மாறியது. மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வந்த த்ரிஷா மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் இணைந்த நிலையில், அதை மட்டுமே நோட் செய்த ரசிகர்கள் த்ரிஷாவுக்கும் கமலுக்கும் செட்டே ஆகாது என்றும் கமலுக்கு ஹாட்ரிக் தோல்வியை தற்போது தக் லைஃப் படத்தின் மூலம் த்ரிஷா கொடுத்து அதை நிரூபித்து விட்டார் என்கின்றனர்.

Tags:    

Similar News