கோலிவுட்டில் விட்டதை பிடிக்க ரெடியான சூர்யா… அடுத்த Big இயக்குனர்களுக்கு ஸ்கெட்ச்…
Surya: நடிகர் சூர்யா தொடர்ச்சியாக கோலிவுட்டில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கும் நிலையில் அடுத்த இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சூர்யா நடிப்பில் தொடர்ச்சியாக வெற்றி படங்கள் கொடுத்த சமயத்தில் அவர் திடீரென தன்னுடைய குடும்பத்துடன் மும்பைக்கு செட்டில் ஆகினார். அங்கு ஜோதிகாவிற்காக செல்லப்பட்டது எனக் கூறப்பட்டாலும் பாலிவுட் படத்தில் நடிப்பதையே விருப்பமாக வைத்திருந்தாராம்.
தொடர்ச்சியாக கதை விவாதங்கள் செய்து வந்ததும், கர்ணன் படத்தில் நடிக்க இருப்பதாகவும் மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் கோலிவுட்டில் சூர்யா ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார்.
எதற்கு துணிந்தவன் திரைப்படத்திற்கு பின்னர் அவர் படம் வெளியாகி 2 வருடங்களை கடந்தது. சூர்யாவின் மார்க்கெட் பெரிய அளவில் சரிந்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்த கங்குவா படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. 2000 கோடி வரை வசூல் குவியும் என பேச்சு இருந்தது.
ஆனால் துரதிஷ்டவசமாக படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. பட்ஜெட் வசூலை கூட எடுக்க முடியாமல் திணறியது. இதை தொடர்ந்து பாலிவுட்டில் சூர்யாவிற்கு வாய்ப்பு கொடுக்க அங்கிருந்த நிறுவனங்கள் நழுவியதாக தகவல்கள் வெளியானது.
இதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. மேலும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா45 படத்தில் திரிஷாவுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். சமீபத்தில் வாடிவாசல் படத்தின் வேலைகளும் தொடங்கி இருக்கிறது.
தற்போது இதுமட்டுமல்லாமல் பிரபல மலையாள இயக்குனர்களான அமல் நீரத் மற்றும் பேசில் ஜோசப்புடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். இருவருமே நடிகர் என்பதாலும் படத்தின் கதையில் வலுவான ஆள் என்பதால் சூர்யா ரொம்ப நம்பிக்கையுடன் இருக்கிறாராம்.
அமல் நீரத் இரண்டு கதை சொன்னதில் சூர்யா ஒன்றை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.