ஷாருக்கானுக்கு தேசிய விருது! நாங்க அமைதியா இருக்கணுமா? கொந்தளித்த ஊர்வசி

சமீபத்தில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர், துணை நடிகர் போன்றவர்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 71 ஆம் ஆண்டுக்கான சினிமா தேசிய விருதுகள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிவிக்கப்பட்டன. அதில் தமிழில் இருந்து பார்க்கிங் திரைப்படத்திற்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த திரைப்படம் சிறந்த துணை நடிகர் என்ற அடிப்படையில் அந்த படத்திற்கு விருதுகள் கிடைத்துள்ளன.
பார்க்கிங் திரைப்படத்தை விட அயோத்தி திரைப்படத்திற்கு தான் தேசிய விருது கிடைக்கும் என அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால் அந்த படத்திற்கு எந்த ஒரு விருதும் கிடைக்கவில்லை. சிறந்த துணை நடிகருக்கான விருது பார்க்கிங் படத்தில் நடித்த எம் எஸ் பாஸ்கருக்கு கிடைத்திருக்கிறது .ஜிவி பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது .
அதேபோல ஹிந்தியில் ஜவான் படப்பிற்காக சிறந்த நடிகர் என்ற விருதை ஷாருக்கான் பெற்றிருக்கிறார். சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி பெற்றுள்ளார். இந்த நிலையில் கடும் உழைப்பை போட்டு பல நல்ல கதைகளை கொடுத்தும் அந்த படத்திற்கு விருதுகள் கிடைக்கவில்லையே என அதில் நடித்த நடிகர் நடிகைகள் சிலர் வருத்தத்தில் உள்ளனர். அதில் ஊர்வசி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இத்தனைக்கும் இந்த ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது உள்ளொழுக்கு என்ற ஒரு மலையாள படத்திற்காக ஊர்வசிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் எந்த அடிப்படையில் ஷாருக்கான் சிறந்த நடிகர் என தேசிய விருது கமிட்டி குழு தேர்வு செய்தார்கள் என்ற ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார். அதைப்போல சிறந்த நடிகரான விஜயராகவனை துணை நடிகராக தேர்வு செய்தது எதன் அடிப்படையில்?
அவர் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தும் சிறந்த துணை நடிகருக்கான விருதுதான் அவருக்கு கிடைத்துள்ளது. தமிழில் நான் நடித்த ஜே பேபி படமும் தேசிய விருது குழுவுக்கு அனுப்பப்பட்டது. அதற்கு எந்த விருதும் கிடைக்கவில்லை .அதைப்போல ஆடு ஜீவிதம் படத்திற்கும் ஒரு பாராட்டு கூட கிடைக்கவில்லை .நீங்கள் கொடுப்பதை அமைதியாக வாங்கிச் செல்ல இது ஒன்றும் ஓய்வூதியம் கிடையாது என்று ஊர்வசி தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.