கூட்டம் கூடும்னா உங்களுக்கு எதுக்கு அரசியல் ஆசை..? விஜயை 'சுளீர்' என விளாசும் பிரபலம்

by Sankaran |
vijay
X

விஜயின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...

விஜயின் தாமதமான கருத்துக்கள் எதிர்கால அரசியலுக்கு உகந்தது இல்ல. நாட்டுல என்னென்ன பிரச்சனை இருக்கோ அதுக்கு உடனுக்கு உடன் ரியாக்ஷன் பண்ணிறணும். அது பிரச்சனையின் தன்மையைப் பொருத்தது.

மாணவ புரட்சி

அண்ணா பல்கலை.யில் நடந்த பிரச்சனையைப் பொருத்தவரை அது மாணவியின் பிரச்சனை. தமிழ்நாடே கொந்தளிச்சிட்டு இருக்கு. எப்பவுமே மாணவ சமுதாயம்தான் ஒரு புரட்சியையே உருவாக்கும்.

ஆட்சி மாற்றத்துக்கே மாணவ சமுதாயம் எல்லாம் காரணமா இருந்துருக்காங்க. அதனால அப்படிப்பட்ட பிரச்சனைக்கு முதல் ஆளா நின்னாதான் அந்த அட்ராக்ஷனே உங்க பக்கம் வரும். நான் அரசியல் பண்றதால சொல்றேன். அதைத் தாண்டி நம்ம தங்கச்சியா இருந்தான்னு நினைச்சி வர்றது வேற.

ஒருவேளை விஜய் அரசியல எல்லாம் தாண்டி அந்த உணர்வோடு வந்துருந்தா அதை நாம மதிக்கணும். அது இல்லாம அரசியல்வாதியாக வந்து டெம்ப்ளேட்டா சில விஷயங்களை செய்யணும்னு நினைக்கும்போது இது சற்று தாமதம்னு நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து களத்திற்கு வந்து போராட்டம் பண்ணிருக்கலாம்கறது ஒரு பொதுவான கருத்தா இருக்கு. வந்துருந்தா கரெக்டா இருந்துருக்குமோன்னு கேள்வி கேட்கிறார் ஆங்கர். அதற்கு அந்தனன் இப்படி பதில் சொல்கிறார். கட்டாயம் வரணும். அரசியலுக்கு வர்ற நேரத்துல இந்தமாதிரி பிரச்சனைகள் தான் அவங்களுக்கு முக்கியம்.

உடனடி ரியாக்ட்

அதைக் கவனிச்சி உடனே ரியாக்ட் பண்ணனும். அப்போதானே நமக்காக இவர் ஏதாவது பண்ணுவாருன்னு அவங்களுக்கும் நம்பிக்கை வரும். புதுசா ஒரு விஷயத்தையா உருவாக்க முடியும்? அப்படின்னா ஏற்கனவே இது நடக்கும்போது நீங்க ஊருக்கு முன்னால வந்து நிக்கிறதுதானே சரியான அரசியலா இருக்கும். இவரு எல்லாத்துலயுமே இவருக்கு தகவல் சொல்றவங்க தாமதமா சொல்றாங்களா, இல்ல அவரே தகவலைத் தாமதமா தெரிஞ்சிக்கிறாரான்னு தெரியல.

இப்போ கையிலயே எல்லாம் வந்துட்டு. போன்ல பார்த்துடலாம். டெய்லி என்னென்ன ஹெட்லைன்ஸ்...னு பார்த்துக்கணும். இன்னொருத்தர் அதைச் சொல்லி அது இப்படி இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு அவங்க சொல்றதை சொல்லக்கூடாது.

அரசியலுக்கு சரிப்பட்டு வராது

இவர் போய் கவர்னரைப் பார்த்துருக்கவே கூடாது. அங்க போறதுல எந்தப் பயனும் இல்லை. சம்பிரதாயம்தான். கவர்னர் பதவியே தேவையில்லன்னு சொல்றவரு அங்க போயி நிக்கறது ஏத்துக்கவே முடியலை. செய்தியாளர் சந்திப்பு அவரைப் பொருத்தவரை அது சரிதான். ஆனா இது அரசியலுக்கு சரிப்பட்டு வராது.

anthanan

எப்பவாவது பதில் சொல்லித்தான் ஆகணும். ஆனால் முடிந்தளவு தவிர்ப்பது அவரது இமேஜூக்கு நல்லது. விஜயகாந்தை அப்படித்தான் ட்ரோல் மெட்டீரியலா மாற்றினாங்க. இந்த மீடியாக்கள் நினைச்சதுன்னா பைத்தியமாகவே மாற்ற முடியும்.

சீமான் வரும்போது நல்லா தானே இருந்தாரு. கிட்டத்தட்ட அவரையும் இன்னொரு விஜயகாந்தா மாற்றிட்டாங்கள்ல. ஸ்டேஜ்ல செருப்பைத் தூக்கிக் காமிச்சாருல்ல. எந்தளவு அவருக்கு ஆத்திரம் வந்துருக்கும்? அப்படின்னா அந்தக் கட்டத்துக்குக் கொண்டு போறது இந்த மீடியாதான். கேள்விகளை எதிர்கொள்ற பக்கம் விஜய்க்கிட்ட இருக்கான்னு தெரியல.

விஜய் கோபக்காரர்

நான் கேள்விப்பட்டவரை அவர் கோபக்காரர் என்றார் அந்தனன். அடுத்ததாக ஆங்கர் விஜய் இப்போது எல்லாமே வீட்ல வச்சே பண்றாரு. வீட்ல வச்சி தலைவர்கள் படத்துக்கு மாலை போடுறது, நிவாரணம் கொடுக்குறது. களத்துல இறங்கி போராட விரும்பலன்னு சொல்றாரே விஜய்னு கேட்கிறார். அதற்கு அந்தனன் முதல்ல அவர் அதுல இருந்து வெளியில வரணும். வெளிய வந்து அரசியல் பண்ணினா தான் மக்கள் மத்தியில நம்பிக்கை வரும்.

எதுக்கு அரசியல் ஆசை?

கூட்டம் கூடுதுன்னு சொன்னா எதுக்கு அரசியல் ஆசை. நல்லா கேரவன்ல இருந்துக்கிட்டு நடிச்சிக்கிட்டுப் போகலாமே. கூட்டம் இருக்கு. வந்தா கலவரம் ஆகிடும்னு எவ்வளவு காலத்துக்குச் சொல்ல முடியும். எம்ஜிஆருக்கு இல்லாத கூட்டமா? அவரே மக்களை சந்திச்சாரு. அவரை விடவா பெரிய ஆளா ஆகிட்டீங்க? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story