புளூசட்டைமாறனை வம்புக்கு இழுக்கிறாரா அந்தனன்...? இப்படி பேசிட்டாரே..!

By :  SANKARAN
Published On 2025-07-20 15:51 IST   |   Updated On 2025-07-20 15:51:00 IST

நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் சமீபத்தில் இனி திரையரங்குளுக்கு ரிவியூவர்ஸ் வந்து ரசிகர்களிடம் கருத்து கேட்கக்கூடாது என்று பேசியிருந்தார். இதுகுறித்து பிரபல வலைப்பேச்சு அந்தனன் என்ன சொல்கிறார்னு பாருங்க. விமர்சனத்தைப் பற்றி பேசும்போது விஷால் இனி தியேட்டருக்குள்ளே ரசிகர்களை சந்தித்து படத்தைப் பற்றிக் கேட்கக்கூடாது என்றெல்லாம் காரசாரமாகப் பேசி இருக்கிறார்.

விமர்சனமே படத்துக்குப் பண்ணக்கூடாது என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். அவர் ஒரு தயாரிப்பாளர். அந்த வலி அவருக்குத் தான் தெரியும். ஆனா அவரு சொல்றது நடைமுறைக்கு ஒத்துவராது. இன்னைக்கு செல்போன் வச்சிருக்குறவங்க எல்லாருமே ரிவியூவர்ஸா மாறிட்டாங்க. அதனால யாரும் விமர்சனம் பண்ணக்கூடாதுன்னு எல்லாம் சொல்ல முடியாது.

தியேட்டர்ல வச்சி ரசிகர்களைக் கேட்காதீங்க. வெளியே போய் வேணாலும் கேளுங்கன்னு விஷால் சொல்லி இருப்பது எந்தளவு கரெக்ட்னு தெரியல. உள்ளே சொல்லப் போறதைத் தானே வெளியே போனாலும் ரசிகன் சொல்லப்போறான். அதே மாதிரி புளூசட்டை மாறன் எல்லாப் படத்தையுமே கழுவி கழுவித் தான் ஊத்துவாரு. 100க்கு ஒரு படத்தை வேணா நல்லாருக்குன்னு சொல்வாரு.

அவரு சொல்ற எல்லா ரிவியுமே காமெடிh தான் இருக்கு. அவரு சொல்ற எல்லா படமும் ஓடாமத் தான் இருக்கான்னா ஓடத் தான் செய்யுது. எதுக்கு விமர்சனத்தைப் பார்க்க வர்றாங்கன்னா அது ஒரு ஜாலிக்கு. இவரு பேசினா காமெடியா சொல்வாரு. இவரு பேசினா திட்டுவாரு. படத்தை நாம பார்த்துக்குவோம்.


இவங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்னு தான் ரிவியு பார்க்க வர்றாங்க. இதை வேதவாக்கா கருதி புளூசட்டை மாறன் சொல்லிட்டாரு... நான் படம் பார்க்க போக மாட்டேன்னு எவனுமே இல்லை. அவனுக்குப் பிடிச்சா போவான். படம் பார்ப்பது என்பது மிகப்பெரிய செலவா மாறிடுச்சு. அதனால அவன் 10 பேரு சொல்றதைக் கேட்குறான். அதுக்கு அப்புறம் அவன் ஒரு முடிவுக்கு வர்றான்.

முடிவு பண்ணிட்டான்னா அதைத் தடுத்து நிறுத்த முடியாது. நீ இந்தப் படத்துக்குப் போகாதேன்னு சொன்னாலும் கேட்க மாட்டான். இதை எல்லாம் தாண்டி நல்ல படங்கள் ஓடிக்கிட்டுத் தான் இருக்கு. சமீபத்துல ஓடுனது எல்லாம் சின்ன பட்ஜெட் படங்கள்தான் என்கிறார் வலைப்பேச்சு அந்தனன். 

Tags:    

Similar News