இதெல்லாம் ஒரு படமா? ‘பார்க்கிங்’ படத்திற்கு தேசிய விருது சரியான சாய்ஸா? பிஸ்மி சொல்வத கேளுங்க

parking
2023 ஆம் ஆண்டிற்கான தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழைப் பொறுத்த வரைக்கும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாசுக்கு சிறந்த இசை அமைப்பாளர் என்ற வகையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைப்போல நடிகர் எம் எஸ் பாஸ்கருக்கும் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பார்க்கிங் திரைப்படத்திற்காக வழங்கப்பட்டிருக்கின்றது. இதைப்பற்றி பிரபல பத்திரிக்கையாளர் வலை பேச்சு பிஸ்மி அவருடைய கருத்துக்களை கூறியிருக்கிறார். இதை பற்றி வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பதில் சொல்ல வேண்டும் என்றால் பொதுவாக இங்கு இருக்கிற அரசு விருது என்பதை அரசியல் விருதாகவே பார்க்கப்படுகிறது.
இன்னொரு விஷயம் விருதுகள் வழங்கப்படுவதில்லை வாங்கப்படுகின்றன. இதுதான் பொதுவாகவே ஒன்றிய அரசு வழங்கும் திரைப்பட விருதுகள் ஆனாலும் சரி மாநில அரசு வழங்கும் திரைப்பட விருதுகள் ஆனாலும் சரி இந்த லட்சணத்தில் தான் இருக்கின்றன. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதே நேரத்தில் பார்க்கிங் மாதிரியான ஒரு படத்துக்கும் ஜிவி பிரகாஷ் மாதிரியான ஒரு இசை அமைப்பாளருக்கும் இந்த விருதுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதை பார்க்கும் பொழுது விதிவிலக்காக திறமையானவர்களுக்கும் சரியான படைப்புகளுக்கும் இந்த விருதுகள் அவ்வப்போது கொடுக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
முக்கியமாக பார்க்கிங் படத்திற்கு விருது வழங்கியிருப்பது சரியான சாய்ஸாக இருக்கிறது என நான் நினைக்கிறேன். என்ன காரணம் எனில் பொதுவாக தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கே ஒரு இலக்கணம் இருக்கும். ஹீரோக்களை முன்னிறுத்தும் கதைகளாக இருக்கும். அவர்கள் ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் கதைகளாகவும் அவர்களுடைய ஹீரோயிசத்தை பில்டப் பண்ணுவது மாதிரியான கதைகளாகவும் தான் இருக்கும் . பார்க்கிங் படத்தை எடுத்துக் கொண்டால் ஒரு காரை நிறுத்துவதில் இரண்டு வீட்டை சேர்ந்தவர்களுக்கு இடையேயான அந்த ஈகோ தான் அந்தப் படத்தின் கதை.
ஆனால் பார்க்கிங் படத்தில் இப்படிப்பட்ட இலக்கணங்களை எல்லாம் ஓரமாக வைத்துக்கொண்டு ஒரு சிறுகதை மாதிரியான ஒரு கதையை எடுத்து அதை ஒரு அழகான திரைப்படமாக கொடுத்திருக்கிறார் அந்த படத்தின் இயக்குனர் ராம் குமார் பாலகிருஷ்ணன்.இந்தப் படத்திற்கு இந்திய அளவில் சிறந்த விருது கொடுத்திருப்பது தான் பெரிய மகிழ்ச்சி. அதே படத்திற்கு ரீஜினல் லாங்குவேஜ் என்ற பிரிவில் சிறந்த திரைப்படம் விருதும் கொடுத்திருக்கின்றனர் .

the kerala story
ஆனால் இந்திய அளவில் சிறந்த படமாக பார்க்கிங் படத்திற்கு விருது கிடைக்கவில்லை. அது ஒரு பெரிய ஏமாற்றம், வருத்தம். இந்தியா அளவில் சிறந்த திரைப்படம் தி கேரளா ஸ்டோரி என்ற படத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். அது இஸ்லாமியர்களை காயப்படுத்துகிற, இஸ்லாமியர்களை மோசமானவர்களாக சித்தரிக்கிற ஒரு படம். இந்த விருதிலும் கூட அரசியல் சார்பு இருக்கு என்பதை நம்மால் மறுக்க முடியாது .அதற்கு மிகப்பெரிய சாட்சியாக தி கேரளா ஸ்டோரி படத்திற்கு கொடுத்த விருதே உதாரணமாக இருக்கிறது. சிறந்த படம் என்பது மட்டுமல்ல சிறந்த ஒளிப்பதிவுக்கும் அந்த படத்திற்கு தான் கொடுத்திருக்கிறார்கள் .