பிட்டு படமா எடுத்திருக்கேன்!. சினிமாவை விட்டே போறேன்.. பொங்கிய வனிதா விஜயகுமார்!...
Mrs & Mr movie: குணச்சித்திர நடிகர் விஜயகுமார் - நடிகை மஞ்சுளா தம்பதியின் மகள்களில் ஒருவர் வனிதா. அப்பாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக வசித்து வருகிறார். ஏற்கனவே 2 முறை திருமணம் செய்தும் அது சரியாக அமையாமல் போக மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். ஆனால், இந்த திருமணத்தால் பல பிரச்சனைகளை வனிதா சந்தித்தார்.
பீட்டர் பாலின் முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வனிதாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. அதோடு, நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றவர்கள் வனிதாவுக்கு எதிராக பேச டிவிட்டரே களேபரமானது. ‘நீங்கல்லாம் யாருடி?. இது என் சொந்த பிரச்சனை’ என பொளந்து கட்டினார் வனிதா.
வனிதா சந்திரலேகா என்கிற திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். இதில், விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன், எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல், அநீதி, ஹரா, தண்டுபாளையம், அந்தகன், தில் ராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இப்போது Mrs & Mr என்கிற படத்தை அவரே இயக்கி நடித்திருக்கிறார். இந்த படத்தை அவரின் மகள் ஜோவிகாவே தயாரித்திருக்கிறார்.
இந்த படம் கடந்த 11ம் தேதி வெளியானது. ‘கஷ்டப்பட்டு இப்படத்தை உருவாக்கியுள்ளோம். ஆதரவு கொடுங்கள்’ என செய்தியாளர்களிடமும், ரசிகர்களிடமும் கோரிக்கை வைத்தார். 40 வயதுக்கு மேல் உள்ள ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார் என்பதுதான் படத்தின் கதை. படம் பார்த்த சிலர் படத்தில் ஆபாச காட்சிகள் இருப்பதாக கூறினார்கள்.
இந்நிலையில், வீடியோவில் பேசியுள்ள வனிதா ‘படத்தை பற்றிய விமர்சனங்களை நான் பார்க்கவில்லை. ஆனால், யாரே ஒருவர் பிட்டு படம் என சொன்னதாக கேள்விப்பட்டேன். என் படத்தை பார்த்து நீங்கள் முடிவு செய்யுங்கள். நான் ஒரு சவால் விடுகிறேன். என் படத்தை பார்த்துவிட்டு இந்த காட்சி இந்த படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டிருக்கிறது என ஒருவர் சொன்னால் கூட சினிமாவை விட்டே போய்விடுகிறேன். இந்த படத்தில் இருப்பது எல்லாமே ஒரிஜினல் கண்டெண்ட்’ என பேசியிருக்கிறார்.