பிரதீப் ரங்கநாதன் ஃபேன் ஆகிட்டாரா வரலட்சுமி சரத்குமார்?.. முதுகுல குத்தியிருக்க டாட்டூவை பாருங்க!..

by Saranya |
பிரதீப் ரங்கநாதன் ஃபேன் ஆகிட்டாரா வரலட்சுமி சரத்குமார்?.. முதுகுல குத்தியிருக்க டாட்டூவை பாருங்க!..
X

நடிகை வரலட்சுமி சரத்குமார் உடல் எடையை கணிசமாக குறைத்து சூப்பர் ஸ்லிம்மாக மாறி உள்ள நிலையில் அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அதிலும் அவர் பின்பக்கமாக திரும்பி நின்று முதுகை காட்டியபடி போஸ் கொடுத்த புகைப்படத்தில் இருந்த டாட்டூவை பார்த்த ரசிகர்கள் என்னம்மா இவ்ளோ பெரிய டாட்டூவா என வாயை பிளந்து வருகின்றனர்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் பிரதீப் ரங்கநாதன் ரசிகையாக மாறிவிட்டாரா என்றும் டிராகன் படத்தின் வெற்றிக்கு பிறகு திடீரென தற்போது முதுகில் பெரிய சைஸ் டிராகன் டாட்டூவை போட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் அப்படி கேள்வி எழுப்பி வருகின்றனர்.


வரலட்சுமி சரத்குமார் கடந்தாண்டு நிக்கோலாய் சச் தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும் இரண்டாவதாக வரலட்சுமியை திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறப்பட்டது.

மிகப்பெரிய தொழில் அதிபரான நிக்கோலாய் சச் தேவை பார்த்தாலே மோனா படத்தில் வரும் ஹீரோ போலவே இருப்பார். அவரும் உடம்பில் ஏகப்பட்ட டாட்டூக்களை பச்சை குத்தி உள்ள நிலையில், அவரைப் பார்த்து இன்ஸ்பயர் ஆகி வரலட்சுமி சரத்குமாரும் சீனாவின் நம்பிக்கை சின்னமான டிராகனை தனது முதுகில் பச்சை குத்தியிருக்கலாம் என்கின்றனர்.


நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஹனுமான் மற்றும் மேக்ஸ் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக மாறின. ஹனுமான் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூலையும் மேக்ஸ் திரைப்படம் 100 கோடி வசூலையும் ஈட்டியது.


ஹீரோயினாக நடிப்பதை விட துணை கதாபாத்திரத்தில் நடித்து தூள் கிளப்பி வருகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். நயன்தாராவை போல இவரும் பல படங்களில் ஹீரோ இல்லாமல் உமன் சென்ட்ரிக் கதைகளை தேர்வு செய்து நடித்து பார்த்தார். ஆனால், எந்த படமும் பெரிதாக ஓடவில்லை.

தமிழ் சினிமாவை விட தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் பல படங்களில் பிஸியாக இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story