தனுஷுடன் மீண்டும் இணையும் வெற்றிமாறன்!.. அதுவும் இப்படி ஒரு கதையா?.. சரிதான்..!
Director Vetrimaran : தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய திரைப்படங்கள் எதுவுமே தோல்வியை சந்தித்தது கிடையாது. தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விடுதலை 2.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்தை இயக்கியிருந்தார் வெற்றிமாறன். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி வந்தார் இயக்குனர் வெற்றிமாறன். நடிகர் விஜய் சேதுபதியை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. மேலும் வசூல் ரீதியாகவும் பெரிய அளவு சாதனை படைக்கவில்லை. வெற்றிமாறன் இயக்கிய படங்களிலேயே சுமாரான வரவேற்பை பெற்ற திரைப்படம் விடுதலை 2 தான். இருப்பினும் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றார் இயக்குனர் வெற்றிமாறன்.
அதன்படி தற்போது சூர்யாவை வைத்து தான் இயக்க இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் கதையை தயார் செய்து வருகின்றார். இந்த வருடம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வாடிவாசல் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு படத்தின் அப்டேட் எதுவுமே வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் படம் ட்ராப் என்று கூறி வந்தார்கள்.
தற்போது மீண்டும் அந்த படத்தை கையில் எடுத்திருக்கின்றார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த கதையை மூன்று பாகங்களாக இயக்குவதற்கு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றது. இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு இயக்குனர் வெற்றிமாறன் மீண்டும் தனுஷ் உடன் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாக இருக்கின்றாராம்.
அதாவது கேஜிஎஃப் கதையை மையமாக வைத்து இந்தத் திரைப்படத்தின் கதையை வெற்றிமாறன் உருவாக்கி வருவதாகவும், இது பல ஆண்டுகளுக்கு முன்பு டிஸ்கஸ் செய்யப்பட்ட நிலையில் வாடிவாசல் திரைப்படத்திற்கு பிறகு அந்த படம் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த செய்தி தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
ஏற்கனவே இயக்குனர் பா ரஞ்சித் தங்கலான் திரைப்படத்தை கேஜிஎஃப் பின்பகுதியை மையமாக வைத்து இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது வெற்றிமாறனும் அதே கதையை கையில் எடுத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக வெற்றிமாறன் தனுஷ் காம்போவில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு இருக்கும்.
மேலும் இவர்கள் இருவரின் காம்போவில் வெளியான அனைத்து திரைப்படங்களுமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. அந்த வகையில் ஒருவேளை இந்த திரைப்படம் எடுக்கப்பட்டால் நிச்சயம் அது வெற்றி படமாக இருக்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.