ஒரு வழியா கண்டுபிடிச்சிட்டாங்கப்பா... ரஜினி சொன்ன கழுதை யாருன்னு?

ரஜினிகாந்த் முள்ளும், மலரும், ஆறிலிருந்து 60 வரை படங்களில் வேறு லெவலில் நடித்து இருப்பார். முரட்டுக்காளை படம் தான் அவரை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது. அந்தப் பெருமை இயக்குனர் எஸ்.பி.முத்துராமனையேச் சேரும். அது வரை ஏ சென்டர்களில் மட்டும் ரசித்து வந்த ரஜினியை பி மற்றும் சி சென்டர்களிலும் ரசிக்க ஆரம்பித்தனர்.

அந்த வகையில் வேட்டையன் ஆடியோ லாஞ்ச்ல ரஜினி சொன்ன கதை டோபி, கழுதை, முனிவர் பற்றியது. ஜெயிலர்ல காக்கா, கழுகு கதை சொன்னாரு. அது பயங்கரமா வைரல் ஆனது. அப்போ விஜயைக் குறித்துத் தான் பேசினாருன்னு எல்லாம் சர்ச்சையைக் கிளப்பினாங்க. அதுக்கு அப்புறம் அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியும் வைத்தாகி விட்டது.

அந்த மாதிரி இப்பவும் ரஜினி பேசினா சர்ச்சையாகும்னு நினைச்சாங்க. அது ஜெயிலர் மாதிரி இல்லாம வேறு வகையில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. டோபி, கழுதை கதையில் யாரு அந்தக் கழுதைன்னு தான் இப்போ பேச்சு போய்க்கிட்டு இருக்கு. பொதுவாகவே மேடையில் பேசும்போது அங்கு உள்ளவர்களைப் பாராட்டிப் புகழ்ந்து பேசுபவர்கள் தான் பலரும் உள்ளனர்.


ஆனால் ரஜினி தன்னை நடிப்பில் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்ற இயக்குனர் மகேந்திரனை சிலாகித்துப் பேசியுள்ளது அவரது பெருந்தன்மையையேக் காட்டுகிறது. இவ்வளவுக்கும் அவர் இப்போது நம்மிடையே இல்லை. அப்படிப் பேசுவதற்கு ஒரு மனம் வேண்டும். அந்த வகையில் ரஜினி யாரையுமே பாராட்டத் தயங்க மாட்டார். அது தான் ரஜினியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.

அப்படிப் பார்க்கும்போது ரஜினி வேட்டையன் படவிழாவில் பேசியது என்னன்னா அது அவரைப் பற்றிய கதை தான். ஒரு டோபி இருந்தார். அவர் ரொம்ப தூரம் போய் துணிகளை வெளுக்க வேண்டியிருந்தது. அதற்காக ஒரு கழுதையை வளர்த்தார். அது தான் துணிகளை சுமந்து சென்று அவருக்கு உதவியது. ஒரு நாள் அது காணாமல் போனது. அதை நினைத்துக் கவலைப்பட்டார். அப்புறம் அவர் முனிவர் ஆனார்.

இப்போது மெய்ஞானியாகி விட்டார். இந்த நிலையில் அவர் அந்தக் கழுதையைக் காண நேர்கிறது. என் கழுதை என் கழுதைன்னு எழுந்து ஓடுகிறார். ஆனால் நீ ஏன் ஓடுற... நீ இப்போ டோபி அல்ல. மெய்ஞானின்னு சொல்றாங்க. இதுவே வசதியாகப்பட அப்படியே தொடர்கிறார்னு கதையை முடிக்கிறார் ரஜினி. இந்தக் கதையில் யார் அந்தக் கழுதைன்னு சொல்லப்போனா அது அவரது முள்ளும் மலரும் போன்ற கிளாசிக் படங்களைத் தான் குறிக்குது.

முரட்டுக்காளை, தனிக்காட்டு ராஜா, போக்கிரி ராஜா, ராஜாதி ராஜா, பொல்லாதவன், தர்மதுரை, ரங்கான்னு வந்துட்டேன். இனி முள்ளும் மலரும் உள்ளே போக முடியாது. இப்போ அந்தக் கழுதையைப் பார்த்து நான் போகணும்னு விரும்பினாலும், டோபியாகிய என்னை ஞானியாக உட்கார வச்சிட்டாங்க. ஜானி, ஆறிலிருந்து 60 வரை, முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல் லெவலில் இருந்து ஆக்ஷன் ஹீரோவாக கமர்ஷியல் பக்கம் கொண்டு வந்துட்டாங்க.

அப்போது பட்டி தொட்டி எங்கும் சூப்பர்ஸ்டார் ஆனார் ரஜினி. அதனால் இனி ரஜினி கிளாசிக் பக்கம் திரும்பினாலும் இந்த கமர்ஷியல் பக்கம் வாங்க. இது தான் உங்க இடம்னு உட்கார வச்சிட்டாங்க. குறிப்பாக இப்போ மகேந்திரன் போன்ற இயக்குனர்கள் இல்லை. அவங்க பெண்டைக் கழட்டுனதானல தான் அப்படி என்னால நடிக்க முடிஞ்சதுன்னும் ரஜினி தன்னடக்கத்துடன் பேசியுள்ளார். மேற்கண்ட தகவலை பிரபல சினிமா விமர்சகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it