பட்டும் திருந்தாத விக்கி.. தனுஷ்கிட்ட செஞ்ச வேலைய இன்னும் விடலயா?!.. தயாரிப்பாளர் வச்ச செக்..
தனுஷிடம் செய்த வேலையை lik படத்தின் தயாரிப்பாளரிடமும் காட்டி வருகின்றார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவன்:
தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்த திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் தயாரிப்பில் நானும் ரவுடிதான் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் அவரின் திரை பயணத்திற்கு மட்டுமில்லாமல் வாழ்க்கை பயணத்திற்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தில் நடித்த நடிகை நயன்தாரா காதலித்து வந்தார் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம்:
பல வருடங்கள் காதலித்து வந்த இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணத்திற்கு கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
தனுஷுடன் பிரச்சனை:
நடிகை நயன்தாரா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் நயன்தாராவின் டாக்குமென்டரி படத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து மூன்று வினாடி காட்சிகளை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்கின்றார் என்று அவரைக் காட்டமாக விமர்சித்திருந்தார். இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர நீதிமன்றம் நயன்தாரா தரப்பிலிருந்து பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது.
விக்னேஷ் சிவனின் lik:
இயக்குனர் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்திற்கு முதலில் எல்ஐசி என்று பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பிறகு இந்த பெயர் மாற்றப்பட்டு எல்ஐகே என்று வைக்கப்பட்டிருக்கின்றது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடித்து வருகின்றார். மேலும் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. இந்த திரைப்படத்தை லலித் தயாரித்து வருகின்றார். படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது வெளியாகி இருக்கின்றது.
அதாவது தயாரிப்பாளர் லலித் இந்த திரைப்படத்திற்கு இனிமேல் தன்னால் பணத்தை செலவிட முடியாது என்று கைவிரித்து விட்டாராம். அதற்கு முக்கிய காரணம் விக்னேஷ் சிவன் தான். படம் தொடங்கிய போது சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் உச்சத்தில் இருந்தது. தற்போது அது சரிந்திருப்பதால் படம் வியாபாரம் ஆவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது.
இதனால் தயாரிப்பாளர் இனிமேல் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டாராம். இந்த செய்தி தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இதை கேள்விப்பட்ட பலரும் படத்தை உடனே எடுத்து ரிலீஸ் செய்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. இயக்குனர் விக்னேஷ் சிவன் பல மாதங்களாக இப்படத்தை இழுத்தடித்து வருகின்றார்.
அவருக்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஊர் சுற்றுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. மேலும் நடிகர் தனுஷ் தயாரிப்பில் நானும் ரவுடிதான் திரைப்படத்தை எடுத்த போது என்ன பிரச்சனை வந்ததோ? அதே பிரச்சனை தான் தற்போதும் வந்திருக்கின்றது. அப்போது இருந்து தற்போது வரை விக்னேஷ் சிவன் தனது தவறை உணராமல் இருந்து வருகின்றார். இது அவரின் கெரியருக்கு நல்லது அல்ல என்று பலரும் அட்வைஸ் கூறி வருகிறார்கள்.