நல்லா பண்றீங்கப்பா… விடாமுயற்சி ஷோவில் விஜய் ரசிகர்கள் செய்த அலப்பறை… வெவரம் தான்!
Vijay: அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் சூழலில் திரையரங்கில் விஜய் ரசிகர்கள் செய்த விஷயம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் தற்போதைய இரண்டு தூண்கள் என்ற அடையாளப்படுத்தப்பட்டவர்கள் விஜய் மற்றும் அஜித். ஆனால் இதில் நடிகர் அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. இதற்கு முன்னர் விஜய் உடன் வாரிசு திரைப்படத்திற்கு எதிராக அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியானது.
இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தை முடித்தார். பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்திலும் நடித்து முடித்தார்.
இப்படங்களை முடித்துக் கொண்டு தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இரண்டு வருடங்களுக்கு பின்னரே அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.
இப்படத்தின் ரிலீஸ் இருக்கும் முன்னரே இயக்குனர் மகிழ் திருமேனி படத்தில் பெரிய அளவு பில்டப் காட்சிகள் இருக்காது. இப்போதும் பார்க்கும் மாஸ் நடிகர் அஜித்குமாரை இதில் பார்க்க முடியாது. சாதாரணமாக தான் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் என படத்தின் மீதான எதிர்பார்ப்பை மொத்தமாக குறைத்துவிட்டார்.
இதனால் ரசிகர்கள் பெரிய அளவு எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்கு செல்லவில்லை. அதனால் இப்படம் அஜித் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்திருக்கிறது. இருந்தும் கூட இத்திரைப்படம் குடும்ப ரசிகர்களுக்கு ஏதுவாக இருக்காது என்றே தற்போது வரை கருத்துக்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் இன்று திரையரங்குகள் அனைத்தும் கோலாகலமாக காட்சியளித்து வரும் நிலையில், நடிகர் விஜயின் ரசிகர்கள் தங்களுடைய தமிழக வெற்றி கழகத்திற்கு திரையரங்குகளில் வாக்கு சேகரிக்கும் ஆச்சரிய விஷயங்களை தற்போது பார்க்க முடிகிறது. அது குறித்தான வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அஜித் குமாரின் போட்டி நடிகராக இருந்த விஜய் தற்போது சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியல்வாதியாக தன்னுடைய தனி கட்சியை தமிழக வெற்றி கழகம் என்று என தொடங்கி இருக்கிறார். தன்னுடைய கடைசி திரைப்படமான ஜனநாயகனை முடித்த பின்னர் விஜய் மொத்தமாக சினிமாவில் இருந்து விலகுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.