விஜய் படத்துக்கு இப்படி நடந்தது அவமானம் தான்... பிரபலம் சொன்ன ஷாக் தகவல்

வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்துக்கு படம் வெளியாவதற்கு முன் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருந்தது. படம் 1000 கோடி வசூல் நிச்சயம் என்றெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ரசிகர்களும் சான்ஸே இல்லை. இந்தப் படம் நிச்சயம் 1000 கோடின்னு எப்டிஎப்எஸ்சில் சொன்னாங்க. ஆனா இந்தப் படத்தின் வசூல் தமிழகத்தைப் பொருத்தவரை 200 கோடியைக் கூட தாண்டவில்லை என்ற அதிர்ச்சி தகவலை இங்கு ஒரு பிரபலம் தருகிறார். என்னன்னு பார்க்கலாமா...

சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 220 தியேட்டர்ல ரிலீஸ் ஆனது. ஆனால் படத்தின் வரவேற்புக்காக மறுநாளே தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்கிறார் பிரபல பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி.


கோட் படத்துக்கு தமிழ்நாட்டைப் பொருத்தவரை 200 கோடியை நெருங்குனது தான். 195 முதல் 200 கோடி வரை என்பது தான் உண்மை. அதைத் தாண்ட வில்லை. சில ஊர்களில் போதிய ஆடியன்ஸ் இல்லாம கோட் படம் ஷோ பிரேக் ஆகியிருக்கு. போதிய ஆடியன்ஸ் இல்லாட்டா அந்த ஷோவை கேன்சல் பண்ணிடுவாங்க. விஜய் என்கிற இத்தனை பெரிய நடிகருக்கு ஷோ பிரேக் ஆகியிருக்கு என்பது அவமானம். ஏன் அப்படி செய்யணும்?

ஆடியன்ஸ் இல்லன்னா படத்தைத் தூக்கிடலாமே. அதுதான் கௌரவமா இருக்கும். நான் என்ன கேள்விப்பட்டேன்னா சில தியேட்டர்கள்ல அட்வான்ஸ் வாங்கியிருக்காங்க. அது இதுவரைக்கும் கவர் ஆகலங்கறதுக்காக படத்தை ஓட்டுங்கன்னு விநியோகஸ்தர்கள் தரப்பில சொன்னாங்களாம். அதனால தியேட்டர்காரங்க வேற வழியில்லாம படத்தை ஓட்டிக்கிட்டே இருக்காங்களாம்.

நிறைய படங்கள் இந்த வாரமும் வருவதனால பெரிய அளவில் வசூல் ஆகாது. சனி, ஞாயிறு தான் ஓரளவு இருக்கும். அடுத்தடுத்து நாள்கள்ல எதிர்பார்க்க முடியாது. 1000 தியேட்டர்ல ரிலீஸ் பண்ணினா 3 நாளைக்கு மேல தியேட்டர்ல ஆள் இருக்குறது தான் ஆச்சரியமா இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it