சிவகார்த்திகேயனை தாக்குப் பிடிப்பாரா விஜய்...பிரபல தயாரிப்பாளர் சொல்வது என்ன?

by Bala |   ( Updated:2025-07-28 14:52:58  )
சிவகார்த்திகேயனை தாக்குப் பிடிப்பாரா விஜய்...பிரபல தயாரிப்பாளர் சொல்வது என்ன?
X

தமிழ் சினிமாவின் உச்ச‌ நடிகர்களில் ஒருவர் விஜய். நடிப்பு,நடனம் என தனது தனித்திறமைகளால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். சினிமாவில் உச்சம் தொட்டுவிட்டு தற்போது மக்களின் சேவைக்காக அரசியலில் குதித்துள்ளார். சினிமா பின்னணி இவருக்கு அரசியலில் தனி அடையாளத்தை கொடுக்குமே தவிர அது வெற்றி கொடுக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதுவரை ஆட்சி செய்தவர்கள் எல்லாம் சினிமா துறையில் இருந்து வந்தவர்கள் தான். அதே பாதையில் இவரும் வருகிறார். இதில் வெகு சிலரே வென்றுள்ளனர். பலர் இந்த போரில் காணாமல் போய் உள்ளார்கள். அந்த வகையில் விஜய் தாக்கு பிடிப்பாரா இல்லை மீண்டும் சினிமாவிற்கே திரும்பி விடுவாரா என்று எதிர்வரும் தேர்தலில் தெரிந்துவிடும். தற்போது விஜய் கடைசி படமாக எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இந்தப் படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளிவர உள்ளது.

இந்நிலையில் தனது கடைசி படத்தை சோலோவாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போட்டிக்கு நாங்களும் வரலாமா என்று களத்தில் குதித்துள்ளார் சிவகார்த்திகேயன். இயக்குனர் சுதா கொங்கார இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி திரைப்படமும் ஜனவரி மாதம் தான் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளரும் சினிமா விமர்சனமான டி தனஞ்ஜெயன் கூறியதாவது,” விடுமுறை அதிகமாக உள்ள பொங்கல் மாதிரி ஒரு பண்டிகையில் இரண்டு படங்கள் தாராளமாக வரலாம். ஏனென்றால் சுமார் 10 நாட்களுக்கு மேல் விடுமுறை கிடைக்கும் என்பதால் பொதுமக்களே கூட என்னடா ஒரு படம்தான்னா..? என்ற எண்ணம் எழுவதுண்டு. ஒரு படம் வந்தால் திரும்பவும் அதே படத்தை பார்க்க மக்கள் தயங்குவார்கள்.”

அந்த வகையில் இரண்டு படங்கள் ஜனநாயகன் மற்றும் பராசக்தி வருவது நல்லது தான். இது சினிமா இண்டஸ்ட்ரிக்கும் நல்லது பொங்களுக்கு இந்த மாதிரி இரண்டு படங்கள் வந்து மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறது அதற்கான வரலாறு இருக்கிறது. வாரிசும், துணிவும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதேபோல விஸ்வாசம், பேட்ட எல்லாம் வெற்றி பெற்ற படங்கள் தான்.

இங்கு இன்னொரு பிரச்சனை என்னவென்றால் படத்திற்கான வசூல் பகிரப்படுகிறது அல்லது குறைக்கப்படுகிறது என்று சொல்லலாம். உதாரணத்துக்கு ஜனநாயகம் 500 கோடி என்று கணக்கு போட்டால் அது விஜய் படத்துக்கு 300 கோடியும் சிவகார்த்திகேயன் படத்துக்கு 200 கோடியும் என்ற வசூல் பிரிக்கப்படுகிறது. இதனால் ரசிகர்களிடம் தலைவரின் கடைசி படத்திற்கு வந்த சோதனையா இது என்று சமூக வலைதளங்களில் புலம்பி தள்ளுவார்கள். இங்கு மிகப்பெரிய கலெக்ஷன் எடுக்க வேண்டும் என்றால் சோலோவாகத்தான் களமிறங்க வேண்டும். அப்பொழுதுதான் இன்டஸ்ட்ரி ஹிட்டாக அந்த படம் மாறும். இதுதான் ஜனநாயகன் படத்திற்கு இருக்கும் சிக்கல். இவ்வாறு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Next Story