எனக்கு ஆசிர்வாதமாக வந்த படங்கள் அந்த மூணுதான்... விஜய் சேதுபதி சொன்ன அல்டிமேட் தகவல்

by SANKARAN |
vijaysethupathi
X

ஆறுமுகக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ஏஸ் படம் நாளை வெளியாகிறது. இதையொட்டி யூடியூப் சேனல் ஒன்றில் விஜய்சேதுபதியின் பேட்டி இடம்பெற்றது. அதில் அவர் சொன்ன சில தகவல்கள்தான் இவை.

மகாராஜா படத்தை நித்திலன் 2 மடங்கு சம்பாதிச்சிக் கொடுக்கும்னு சொன்னான். அவன் திமிருல சொல்றான்னு நினைச்சேன். படம் நல்லா வந்துருக்குன்னு எனக்கும் தெரியும். ஆனா இப்படி வெற்றி அடையும்னு தெரியாது. ஆடியன்ஸ் வந்து பார்த்து எப்படி ரியாக்ட் பண்ணப் போறாங்கன்னு கொஞ்சம் பதட்டம் இருக்கும்.

சில படங்களை நாம நம்பி இருப்போம். ஆனா அது நம்பினா மாதிரி நடந்துருக்காது. சில படங்கள் நடந்துருக்காது. காலம் தள்ளிப் பாராட்டப்படும். பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு காலம் தள்ளி பெரிய ஃபேன்ஸ் இருக்காங்க. அந்த மாதிரி ஒரு படம் தான் கடைசி விவசாயி.

சில படங்கள் இருக்கு. எனக்கு கிடைச்சதை நான் ஆசிர்வாதமாகத் தான் பார்க்கிறேன். சூப்பர் டீலக்ஸ், கடைசி விவசாயி, சீதக்காதி என இந்த 3 படங்களும் எனக்கு ரொம்ப முக்கியமானது. தலைவன் தலைவி படத்தைக் கூட ரொம்ப பயந்துதான் பண்ணினேன். மெய்யழகன் நான் பண்றதுக்கு முன்னாடி பேசினேன். டேட் ஒத்து வரல. நிறைய படங்கள் அப்படி போயிடுச்சு என்கிறார் விஜய் சேதுபதி.


ஆறுமுகக்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள படம் ஏஸ். ருக்மினி வசந்த் கதாநாயகி. யோகிபாபு, பப்லு உள்பட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். நாளை வெளியாக உள்ள இந்தப் படத்தின் ரன்னிங் டைம் 2.30 மணி நேரம் 4 நிமிடங்கள்.

படத்தின் இயக்குனர் ஆறுமுகக்குமாரைப் பொருத்தவரை இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தை இயக்கினார். அது ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை. அதனால்தானோ என்னவோ ஏஸ் படத்திற்கும் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. விஜய்சேதுபதியிடம் இதுபற்றி கேட்டால் அருண் இயக்கத்துல பண்ணையாரும் பத்மினியும் படத்துல நடிச்சேன். படம் சூப்பரா இருந்தது. ஆனா அதுக்கு வரவேற்பு இல்லை. எப்பவோ ஒரு தடவை மிஸ் ஆகும். ஆனா அந்த டைரக்டரோட ஒர்க் எனக்குப் பிடிச்சிருந்தது. அதனால இன்னொரு தடவை அவரு கூட ஒர்க் பண்ணனும்னு நினைச்சேன். அதுதான் சிந்துபாத். அது மாதிரி தான் இந்தப் படமும் என்கிறார்.

Next Story