விஜய் மனைவி சங்கீதாவை பிரிந்தாரா? எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படி போட்டு உடைச்சிட்டாரே?
Vijay - Sangeetha: தளபதி விஜய் தன்னுடைய மனைவி சங்கீதாவை பிரிந்து விட்டதாக தகவல்கள் கசிந்து வரும் நிலையில் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் தன்னுடைய பேட்டியில் முக்கிய தகவல் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.
இயக்குனர் எஸ் ஏ சி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும்போது அவருடைய மகனான விஜய் நடிக்க ஆசைப்படுவதாக அவரிடம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் முதலில் மகனின் நடிக்க வைப்பதில் இவருக்கு பெரிய அளவில் விருப்பமில்லை.
ஆனாலும் அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினிகாந்த் பேசிய டயலாக் பேசி அப்பாவின் மனதை மாற்றியிருக்கிறார். ஒன்றல்ல இரண்டல்ல தொடர்ச்சியாக 7 திரைப்படங்களை தன்னுடைய மகனுக்காக இயக்கியவர் எஸ்ஏ சந்திரசேகர். ஆனால் எல்லா படங்களும் பெரிய அளவில் வெற்றி இல்லை.
பின்னர் தனக்கு தெரிந்த தயாரிப்பு நிறுவனம் முதல் இயக்குனர் வரை மகனுக்காக வாய்ப்பு தேடி அலைந்தார். தொடர்ந்து கடைசியாக துப்பாக்கி திரைப்படம் வரை விஜய்யின் கதையை கேட்டு கால்ஷீட் முடிவு செய்வதும் எஸ்ஏ சந்திரசேகர் தான் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
லண்டனில் இருந்து வந்த சங்கீதா விஜயின் ரசிகையே ஆகத்தான் அவருடைய குடும்பத்திற்கு முதலில் அறிமுகமாகிறார். பின்னர் தன்னுடைய காதலை விஜயிடம் சொன்ன பின் அவருடைய பெற்றோரும் அதற்கு ஒப்புக்கொள்கின்றனர். இரு வீட்டார் சம்மதத்துடன் லண்டனில் இவர்கள் திருமணம் நடந்தது.
இதைத்தொடர்ந்து இவர்களின் திருமண வரவேற்பு விழா சென்னையில் நடத்தப்பட்டது. இத்தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா ஷாஷா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். பொதுவாக விஜய் தன்னுடைய திரைப்பட விழாவிற்கு மனைவியுடன் செல்வதுதான் வழக்கம்.
ஆனால் கடைசியாக இருவரும் ஒன்றாக கலந்து கொண்டது மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மட்டும் தான். அதைத்தொடர்ந்து பொது விழாக்களில் கூட மனைவியை அழைத்து வருவதில்லை. சங்கீதாவும் கடைசியாக திமுக வீட்டில் நடந்த ஒரு இரங்கல் நிகழ்வில் கலந்து கொண்டார்.
விஜய் அரசியலில் நுழைவது சங்கீதாவிற்கு விருப்பமில்லை என்றும் கூறப்படுகிறது. இருவருக்கும் வீட்டில் ஏற்பட்ட சச்சரவால் தற்போது இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சிலரோ பிள்ளைகளின் படிப்பிற்காக அவர் மீண்டும் லண்டனில் செட்டில் ஆகிவிட்டதாகவும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் விஜயின் அரசியல் எண்ட்ரி குறித்து அவருடைய மனைவி என்ன சொன்னார் என்று எஸ் ஏ சந்திரசேகரிடம் கேட்டபோது வேண்டாம் வேண்டாம் அதெல்லாம் வேண்டாம் என தெரிவித்திருக்கிறார். மருமகள் பிரிந்து விட்டதால்தான் இவர் இப்படி சொல்லுகிறாரோ என்ற தகவலும் தற்போது கசிந்து வருகிறது.