கமலின் விக்ரம் படப்பிடிப்பில் அப்படி ஒரு ஆபத்து நடந்ததா? எப்படி தப்பிச்சாங்க?
கமல் படம் என்றாலே ரிஸ்க் ஜாஸ்தி தானே...!
கமல், சத்யராஜ் நடிப்பில் வெளியான விக்ரம் படம் அந்தக் காலத்தில் செம மாஸாக இருந்தது. அப்பவே ஒரு சயின்ஸ் பிக்ஷன் படத்தை வெகு அருமையாக ராஜசேகர் இயக்கி இருந்தார். இந்தப் படத்திற்கு கதை எழுதியவர் சுஜாதா.
படத்தில் அம்பிகா, சாருஹாசன், லிசி, மனோரமா, விகே.ராமசாமி, அம்ஜத்கான், டிம்பிள்கபாடியா, ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா முதன்முறையாக கம்ப்யூட்டர் மியூசிக் போட்ட படமும் இதுதான். படத்தில் அத்தனைப் பாடல்களும் சூப்பர்ஹிட். இந்தப் படத்தின் போது நடந்த ஒரு ஆபத்தான விஷயத்தை பிரபல இயக்குனரும் நடிகருமான ராஜா பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...
விக்ரம் படத்துல கடைசிநாள் ராஜஸ்தானில் சூட்டிங் முடிச்சிட்டு கிளம்பும்போது பிரேக் விடலை. பிரேக் விட்டுறலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கும்போது ஒண்ணோ ரெண்டோ தான் ஷாட் இருக்கு. ஒட்டகம் எல்லாம் இருக்கு.
ஷாட் எடுத்துட்டு பிரேக் விட்டுட்டு சாப்பிட்டோம். 2வது ஷாட் எடுக்கறதுக்குள்ள புழுதிப்புயல் வந்துடுச்சு. சாப்பாடு எல்லாமே வேஸ்ட். டோட்டலா பிளான் எல்லாமே வேஸ்ட் ஆச்சு. பக்கத்துல உள்ள ஆள் தெரியாது. ஒரு நாள் தானேன்னு கேன்சல் பண்ணிட்டு ஒருநாள் இருந்து சூட்டிங் பண்ணிட்டுக் கிளம்பினோம் என்கிறார்.
இந்தப்படம் தான் தமிழ்த்திரை உலக வரலாற்றில் முதன்முதலாக ஒரு கோடி ரூபாய் செலவில் தயாராக்கப்பட்டதாம். படத்தில் விக்ரம், விக்ரம், வனிதாமணி, சிப்பிக்குள் ஒரு முத்து, ஏஞ்சோடி, மீண்டும் மீண்டும் வா ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன. இந்தப் படம் வெளியான ஆண்டு 1986.
படத்தில் சத்யராஜ் வில்லனாக பட்டையைக் கிளப்பி இருப்பார். இந்தப் படத்தில் அவர் ஒரு கூலிங்கிளாஸ் அணிந்து இருப்பார். அதில் ஒரு சைடு கூலிங் லென்ஸ் இருக்காது.
அதே பாணியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் வில்லனாக வரும் விஜய் சேதுபதியும் கூலிங் கிளாஸ் அணிந்து மாஸ் காட்டியிருப்பார்.