தேவா இசையில் பிரசாந்த் நடிக்க இருந்த விக்ரமன் படம்... அடடா எப்படி மிஸ் ஆச்சு?
பாரதிராஜாவின் உதவி இயக்குனர் பாக்கியராஜ். இவரது உதவி இயக்குனர்கள் பாண்டியராஜன், பார்த்திபன். இவர்களில் பார்த்திபனின் உதவி இயக்குனர் விக்ரமன். என்ன ஒரு குருவழிப் பரம்பரை என்று பாருங்கள்.
அந்த வகையில் விக்ரமனின் படங்களில் பார்த்திபனின் சாயல் கொஞ்சம் கூட இருக்காது. அவர் குடும்பம் மற்றும் காதல்; சுவாரசியம் கொண்ட படங்களாக இயக்குவார். அவரது முதல் படம் புதுவசந்தம்.
சூர்ய வம்சம்
பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இவரது இயக்கத்தில் நான் பேச நினைப்பதெல்லாம், புதிய மன்னர்கள், பூவே உனக்காக, சூர்ய வம்சம், கோகுலம், உன்னிடத்தின் என்னை கொடுத்தேன், வானத்தைப் போல, உன்னை நினைத்து, பிரியமான தோழி என பல சூப்பர்ஹிட் படங்கள் வந்துள்ளன.
தேவாவுடன் வாய்ப்பு
பெரும்புள்ளி என்ற ஒரு படம் மட்டும் பிளாப். இவர் இளையராஜாவுடனும், தேவாவுடனும் இணைந்து பணியாற்றவில்லை. இவர்களில் தேவாவுடன் ஒரு வாய்ப்பு வந்தது. அதுல பிரசாந்தும் நடிக்க இருந்தார். அப்புறம் எப்படி மிஸ் ஆச்சுன்னு சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். வாங்க என்னன்னு பார்ப்போம்.
பாலகிருஷ்ணன்னு ஒரு விநியோகஸ்தர் இருந்தார். அவர் எல்லாருக்கும் அட்வான்ஸ் கொடுப்பாரு. அவர் சொன்னது என்னன்னா ஜெமினிகணேசன் காலத்துல இருந்தே எல்லாருக்கும் அட்வான்ஸ் கொடுத்துருக்கேன்.
பிரசாந்த்
ஆனா திரும்பி வாங்கிட்டேன். அப்படி எங்கிட்டயும் அட்வான்ஸ் கொடுத்து திரும்பி வாங்கிட்டாரு. அப்போ அவருக்கு ஒரு படம் பண்ற மாதிரி இருந்தது. ஹீரோ பிரசாந்த். அவருக்கு அது வைகாசி பொறந்தாச்சுக்கு அப்புறம் வர்ற 2வது படமா இருந்துருக்கும்.
திவ்யபாரதி
ஹீரோயின் திவ்யபாரதி. நிலாப்பெண்ணே படத்துல நடித்தார். அவங்க தற்கொலை பண்ணிட்டாங்க. அவரை ஹீரோயினா வச்சி அருமையான லவ் சப்ஜெக்ட். ஃபுல்லா ஊட்டியிலேயே நடக்கும். அதுக்கு தேவா சார் மியூசிக் போடுற மாதிரி இருந்தது.
தேவா கம்போசிங்க்
அப்போ தேவா சார் ஒரு படம்தான் பண்ணிருந்தாருன்னு நினைக்கிறேன். அவரும் கம்போசிங்க் எல்லாம் வந்து பார்த்தாரு. ஆனா அவருக்கும் பண்ண முடியாத சூழல் வந்துட்டு. அப்படியே பல காரணங்களால படமே நின்னு போச்சு. அது பண்ணிருந்தா தேவா சாரு கூடவும் படம் பண்ணியிருப்பேன் என்றார் இயக்குனர் விக்ரமன்.