இதுக்கு மேல லேட் பண்ணா அசிங்கம் அதிகமாகிடும்!.. விஷாலால் வந்த வினை.. சட்டுபுட்டுனு அதை பண்ண நடிகை!..

by Akhilan |   ( Updated:2025-03-10 14:31:06  )
Vishal Abinaya
X

Vishal: விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனியில் அவருக்கு ஜோடியாக நடித்த அபிநயாவுடன் காதல் சர்ச்சை கசிந்த நிலையில் நடிகை எடுத்திருக்கும் திடீர் முடிவு குறித்து வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் விஷால் ஹீரோவாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், இயக்கத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார். ஆக்‌ஷனில் கலக்கி வந்த விஷால் தன்னுடைய நடிப்பில் சமீபத்தில் நடித்த திரைப்படம் மார்க் ஆண்டனி.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் அபிநயா. இருவரும் ஒரு கட்டத்தில் காதல் வதந்தி கசிந்தது. திருமணம் செய்து கொள்ள போவதாக விஷயம் வெளிவந்த நிலையில் ஒரு பேட்டியில் அபிநயா கூட அதெல்லாம் இல்லை.



தான் வேறு ஒருவரை 15 வருடமாக காதலித்து வருவதாக விஷயத்தை உடைத்தார். இந்நிலையில் தன்னுடைய காதலருடன் திடீரென நிச்சயம் நடந்து இருப்பதாக புகைப்படத்தினை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

ஆனால் வருங்கால கணவர் குறித்து புகைப்படம் மற்ற எந்த தகவலையும் அபிநயா வெளியிடவில்லை. இருவரின் கை மட்டுமே இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு இருக்கிறார். 15 வருடமாக காதலில் இருவரும் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் பேட்டியில் நாங்கள் இருவரும் இன்னும் திருமணம் குறித்து பிளான் செய்யவில்லை. அதுக்கெல்லாம் டைம் இல்லை. நான் இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கு எனவும் குறிப்பிட்டு இருந்த அபிநயா திடீரென இந்த முடிவை எடுத்து இருப்பது விஷால் மீதான காதல் சர்ச்சையால் குடும்பத்தில் நிலவும் அதிருப்தி தான் எனக் கூறப்படுகிறது.

தமிழில் நாடோடிகள் படத்தில் அறிமுகமான அபிநயாவிற்கு சரியாக பேச வராதிருந்த போதும், காது கேட்கும் திறன் குறைபாடு இருந்தபோதிலும் நடிப்பில் தொடர்ச்சியாக ஹிட்டடித்து வருகிறார். சமீபத்தில் மலையாத்தில் பனி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story