அந்த படம் ஓடல... வாயை விட்ட விஷ்ணுவர்தான்!. ஐயோ அஜித் படம் கொடுக்க மாட்டாரே!...
Ajithkumar: இயக்குனர்களில் இரண்டு விதம்தான். என் கதைக்குதான் ஹீரோ. ஹீரோவுக்காக கதை எழுத மாட்டேன். எந்த பெரிய ஹீரோ பின்பும் போக மாட்டேன். அவர்களுக்கு நடிக்க விருப்பம் இல்லையென்றால் புது முகங்களை வைத்து கூட படமெடுப்பேன். இல்லை ஒரு சின்ன ஹீரோவை போட்டு கூட ஹிட் கொடுப்பேன் என கெத்தாக இருப்பார்கள். பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், பாலா என சிலர் அப்படி இருக்கிறார்கள்.
ஹீரோவுக்காக படம்: அடுத்து முன்னணி மற்றும் பெரிய ஹீரோக்களுக்காக கதை எழுதுவார்கள். ஹீரோ என்ன சொல்கிறாரோ அந்த மாற்றங்களை கதையில் சொல்வார்கள். அந்த ஹீரோவின் ரசிகர்களுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அது எல்லாம் படத்தில் இருக்கும். அதாவது, அது அந்த ஹீரோவின் படமாக மட்டுமே இருக்கும். பெரிய ஹீரோவை வைத்து படம் இயக்கினால் தனக்கு மற்ற பெரிய நடிகர்கள் வாய்ப்பு கொடுப்பார்கள் என்பதற்காக பல இயக்குனர்கள் தங்களை அப்படி மாற்றிகொள்வார்கள். இதை நடிகர்களும் பயன்படுத்தி கொள்வார்கள்.
ஒரு படம் ஹிட் கொடுத்த அறிமுக இயக்குனரை அழைத்து ‘நாம் சேர்ந்து ஒரு படம் செய்வோம். ஒரு கதையை ரெடி பண்ணுங்கள்’ என்பார்கள். அந்த இயக்குனரும் ‘நமது இரண்டாவது படமே பெரிய ஹீரோ’ என ஆசையாக கதையை உருவாக்குவார். ஆனால், கொஞ்சம் காத்திருங்கள் என சொல்லி காக்க வைப்பார்கள். இப்படி 4 வருடங்கள் காத்திருந்த இயக்குனர்கள் கூட பலர் இருக்கிறார்கள்.
அஜித்குமார்: நடிகர் அஜித் எப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினாரோ அப்போதே தான் நடிக்கும் படத்தின் இயக்குனர் யார்? தயாரிப்பாளர் யார்? என்பதை அவரே முடிவு செய்ய துவங்கினார். அவர் சொல்வதை அந்த இயக்குனர் கேட்க வேண்டும் என எதிர்பார்த்தார். அவர் சொன்னதை கேட்காத இயக்குனர்களுக்கு படமே கொடுக்க மாட்டார்.
முருகதாஸ் கஜினி: முருகதாஸ் சொன்ன கஜினி கதை அஜித்துக்கு பிடித்துப்போக சில மாதங்கள் காத்திருக்க சொன்னார். ஆனால், அவர் சூர்யாவை வைத்து அந்த படத்தை எடுத்தார். இந்த கோபத்தில் முருகதாஸுக்கு அஜித் படமே கொடுக்கவில்லை. அஜித்துக்கு மங்காத்தா எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் வெங்கட்பிரபு. ஒருமுறை விஜயும் அஜித்தும் சந்தித்துக்கொண்டபோது ‘உங்கள் இருவரையும் வைத்து ஒரு படம் இயக்க ஆசை’ என வெங்கட்பிரபு சொல்ல இருவருமே ஓகே சொன்னார்கள். இந்த தகவலை வெங்கட்பிரபு அவரின் அப்பா கங்கை அமரனிடம் சொல்ல அவர் மீடியாவில் சொல்லிவிட்டார். இதனால் கோபப்பட்ட அஜித் அதன்பின் வெங்கட்பிரபுவை அழைக்கவே இல்லை. இதுதான் அஜித்தின் குணம். நாம் சொல்லும்போதுதான் இயக்குனர் அதை வெளியே சொல்ல வேண்டும் என நினைப்பார்.
விஷ்ணுவர்தன்: அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என 2 படங்களை இயக்கியவர் விஷ்ணு வர்தன். அஜித்தின் புதிய படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்கிற லிஸ்ட்டில் எப்போதும் விஷ்ணு வர்தனின் பெயர் இருக்கும். அஜித்தின் குட் புக்கில் எப்போதும் இருப்பவர் இவர். இவர் அஜித்தை வைத்து படமெடுத்து 11 வருடங்கள் ஆகிவிட்டது. அஜித் அழைப்பார் என காத்துக்கொண்டே இருக்கிறார்.
இந்நிலையில்தான் விழா ஒன்றில் பேசிய விஷ்ணு வர்தன் ‘ரஜினியின் பில்லா படம் ஓடவில்லை. எனவே, அந்த படத்தை எப்படி ரீமேக் செய்வது என யோசித்தேன். அந்த டான் வேடம் எனக்கு பிடித்திருந்தது. எனவே, அதை வைத்து படத்தை எடுத்தேன்’ என சொல்லியிருக்கிறார். ரஜினி சொல்லித்தான் அஜித் பில்லா ரீமேக்கில் நடித்தார் என செய்தி உலாவரும் நிலையில், விஷ்ணுவர்தன் இப்படி பேசியிருப்பது கண்டிப்பாக அஜித்துக்கு கோபத்தை ஏற்படுத்தும். எனவே, விஷ்ணுவர்தனுக்கு தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுக்க மாட்டார் என்றே கருதப்படுகிறது.