புரமோஷனில் கமல் சொன்னது எல்லாமே பொய்!. வெளுத்து வாங்கும் பிரபலம்!..

By :  MURUGAN
Published On 2025-06-12 11:54 IST   |   Updated On 2025-06-12 11:54:00 IST

Thug life: மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து கடந்த 5ம் தேதி வெளியான திரைப்படம் தக் லைப். இந்த படத்திற்கு மிகவும் அதிக அளவில் புரமோஷன் செய்யப்பட்டது. கமல், சிம்பு, மணிரத்னம், திரிஷா, அபிராமி என எல்லோருமே பல ஊர்களுக்கும் சென்று புரமோஷன் செய்தார்கள்.

தக் லைப் படம் நாயகனை தாண்டும் என்றெல்லாம் கமல் பேசினார். ஆனால், படம் பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. படத்தின் கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை. அதோடு, கமல் சின்ன வீடு வைத்திருக்கிறார். அந்த சின்ன வீட்டையும் சிம்பு அடைய முயற்சி செய்கிறார் என்பதை ரசிகர்கள் ஏற்கவே இல்லை.

எனவே, சமூகவலைத்தளங்களில் இப்படம் பற்றி மிகவும் தரக்குறைவாக விமர்சித்தார்கள். மணிரத்னம், கமல், சிம்பு, திரிஷா ஆகியோரை வைத்து மீம்ஸ்களை உருவாக்கி வைரலாக்கினார்கள். இதனால் படத்தின் வசூலே கடுமையாக பாதித்தது. படம் வெளியாகி 7 நாட்கள் ஆன நிலையில் இந்தியாவில் வெறும் 42 கோடியை மட்டுமே இப்படம் வசூல் செய்திருக்கிறது.


இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘பொதுவாக ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் யாரும் உண்மையை பேச மாட்டார்கள். படத்தில் இல்லாததை கூட இருப்பது போல மிகைப்படுத்தி பேசுவார்கள். அதுபோலவே தக் லைப் புரமோஷன்களில் கமல் பேசியது எல்லாமே பொய். நாயகனை விட சிறந்த படத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறோம் என்றார். நாயகன் படத்தில் இருந்த நேர்த்தி 10 சதவீதம் கூட தக் லைப் படத்தில் இல்லை.

அதோடு, அன்பான மனைவி இருக்கும்போது இந்த வயதில் கமலுக்கு சின்ன வீடு வைத்திருக்கிறார் என்பதை ரசிகர்கள் ஏற்கவில்லை. அதுவே படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. பொதுவாக மொக்கை கதையை கூட சுவாரஸ்யமான திரைக்கதை ஜெயிக்க வைத்துவிடும். ஆனால், தக் லைப் படத்தில் கதை, திரைக்கதை இரண்டுமே சரியாக அமைக்கப்படவில்லை.

இந்த கதையில் விஜய் சேதுபதி போன்ற ஒருவரை நடிக்க வைத்திருக்கலாம். ஆனால், கமல் நடித்தது பெரிய தவறு. அவரின் கதாபாத்திரமே நன்றாக இல்லை’ என அவர் பேசியிருக்கிறார்.

Tags:    

Similar News