வணங்கான் படத்தைப் பார்த்து 10 நிமிடம் அழுத நடிகர்... இப்படியா பண்ணுவீங்க பாலா?

by Sankaran |
vanankaan, bala
X

இயக்குனர் பாலாவின் 25வது படம் வணங்கான். நேற்று ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் பாசிடிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. பாலாவின் 25வது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் வகையில் திரையுலகின் சார்பில் சமீபத்தில் விழா நடந்தது. சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் வணங்கான் ஹீரோ அருண்விஜயின் தந்தை விஜயகுமார் சில கருத்துகளைத் தெரிவித்தார்.

நான் சினிமாவுக்கு வந்து 65 வருஷம் ஆச்சு. டைரக்டர் பாலாவுக்கு 25வது வருஷம். நான் பல இயக்குனர்களுடன் பணிபுரிந்துள்ளேன். ஒவ்வொரு இயக்குனர்களும் ஒவ்வொரு விதமாக கதை சொல்வார்கள்.

பாக்கியம்: ஆனா பாலா சார் எடுக்கிற படங்கள் எல்லாம் மாறுபட்டு மக்கள் ஏற்றுக்கொள்கிற அளவுக்கு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், கதையையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட இயக்குனர்கள் இந்தத் திரையுலகிற்குக் கிடைக்க பாக்கியம் செய்திருக்க வேண்டும்.

நந்தா, பிதாமகன்: பாலா படத்துல சேது, நந்தா, பிதாமகன், தாரை தப்பட்டை, நான் கடவுள் பார்த்திருக்கேன். இப்படி பல படங்களைப் பார்த்திருக்கேன். ஆனால் அவர் படங்களில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததில்லை. நானும் கேட்டதில்லை. இருந்தாலும் என்னுடைய மகன் அருண் விஜய்க்கு அந்தப் பாக்கியம் கிடைத்துள்ளது.

படத்தில் நடிப்பதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் ஏ.எல்.விஜய். இந்தப் படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தைரியமானவர். படம் கண்டிப்பாக வெற்றி அடையும். இந்தப் படத்தைப் பார்த்தேன்.


நான் இத்தனை ஆண்டுகள் கலைத்துறையில் இருந்தாலும் இந்தப் படத்தைப் பார்த்து 10 நிமிடங்கள் அழுதுருக்கிறேன். பாலா சார் படத்துக்கு வரவில்லை. ஆனாலும் சுரேஷ் காமாட்சியிடம் இந்தப் படத்துக்கு ரிவார்டு அண்டு அவார்டு உறுதின்னு சொன்னேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன்: வணங்கான் படம் அருண்விஜய்க்கு ஒரு கம்பேக் என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அஜீத்துடன் இவர் இணைந்து நடித்த படம் என்னை அறிந்தால். அதன் வெற்றிக்குப் பிறகு இந்தப் படம்தான் அவருக்கு திருப்புமுனையைத் தந்துள்ளது என்றே சொல்லலாம்.

Next Story