யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்? 6 மாசத்துல 450 கோடி முதல்... என்னதான் நடக்குது?

by SANKARAN |   ( Updated:2025-05-21 10:46:50  )
aakash baskran, str49
X

தமிழ்சினிமாவில் சமீபகாலமாக அதிக படங்களைத் தயாரித்து வருபவர் தான் ஆகாஷ் பாஸ்கரன். அவரது டான் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது சிவகார்த்திகேயன், சிம்பு நடிக்க உள்ள படங்களைத் தயாரித்து வருகிறது.

ஆகாஷ் பாஸ்கரன் வசதி படைத்த குடும்பம். சினிமாவில் இயக்குனர் ஆகி சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் சென்னைக்கு வருகிறார். 2015ல் நானும் ரௌடிதான் படத்தில் அசிஸ்டண்ட் டைரக்டராக ஒர்க் பண்ணுகிறார். அப்போது அவர் சாதாரணமான ஒருவராகத் தான் இருந்தார். 2024ல் அவருக்குக் கல்யாணம் நடக்குது. அப்போது முக.ஸ்டாலின் உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். அப்போது ஆகாஷ் குறித்து பெரிதாகப் பேசப்பட்டது. ஆகாஷ் சேலம் மாவட்டத்துக்காரர். அப்பா பாஸ்கரன் பிஆர்ஆர்.ஸ்வர்ணமாளிகையை வைத்துள்ளார். வசதி படைத்த குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகாஷின் திருமணத்துக்குப் பிறகு 6 மாசத்துல அபரிமிதமான வளர்ச்சி. 6 மாசத்துல 450 கோடி முதலீடு பண்ணுகிறார்.

வரும் பொங்கலுக்கு விஜயின் ஜனநாயகன் படம் ரிலீஸ். ஆனா அந்த சமயத்தில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் ரிலீஸ். போட்டி போடும் வகையில் வருகிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன். பராசக்தியில் சிவகார்த்திகேயன், ரவிமோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். இது திமுக சித்தாந்தத்தைப் பேசும் அளவில் இருக்கும். இந்தப் படத்தின் பட்ஜெட் 250 கோடி.

சிம்புவின் 49வது படம் பார்க்கிங் டைரக்டர் ராம்குமார் தான் இயக்குகிறார். அந்தப் படமும் ஆகாஷ் பாஸ்கரன்தான் அறிவிக்கிறார். கயாடு லோஹர், சந்தானம் என பலரும் நடிக்கின்றனர். அந்த வகையில் யார் இந்த டான் பிக்சர்ஸ்னு கேள்வி எழுகிறது? எப்படி இந்த ஆறு மாசத்துக்குள்ள இவ்ளோ முதலீடு பண்ண முடியுதுன்னு கேள்வி எழுகிறது.


ஆகாஷ் பாஸ்கரன் திமுகவில் உள்ள பலருக்கும் நெருக்கமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று ரைடு விட்டுள்ளனர். 2021 தேர்தல் சமயத்திலும் வருமான வரித்துறையினர் 5 கோடி வரை இவரிடம் கைப்பற்றினார்களாம். இவரது மனைவி தாரனியும் பணம் படைத்தவர்கள்தான் என்கிறார்கள். மேற்கண்ட தகவலை பத்திரிகையாளர் பிரதீப் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறையில் இட்லிகடை படத்துக்கு தனுஷூக்கு 40கோடி, பராசக்திக்காக சிவகார்த்திகேயனுக்கு 25கோடி, சிம்பு 49 படத்துக்காக அவருக்கு 15 கோடி என அட்வான்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆவணங்களின் அடிப்படையில் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயனையும் விசாரிக்க உள்ளதாகத் தெரிகிறது.

Next Story