யார் இந்த சூப்பர் குட் சுப்பிரமணி...? அஜித் அவரிடம் அப்படியா சொன்னாரு?

By :  SANKARAN
Update: 2025-05-12 03:14 GMT

சினிமாவில் ஜெயிச்சவன் எல்லாம் திறமையானவன் கிடையாது. அதே போல தோற்றவன் எல்லாம் திறமை இல்லாதவனும் கிடையாது. அந்தவகையில் சூப்பர் குட் சுப்பிரமணியன் மிகத் திறமையான கிரியேட்டர். அவர் கேன்சரால் இறந்து போனார். அவர் பெரிய கனவோடு வந்தவர். அந்தக் கனவு நிறைவேறாமல் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தது வருத்தமான விஷயம்.

இவர் முண்டாசுப்பட்டியில சாமியாரா நடிச்சாரு. ஜெய்பீம்ல கான்ஸ்டபிளா வந்து திருதிருன்னு முழிச்சி தப்பு தப்பா சொல்லி மாட்ட வைப்பார். தஞ்சாவூர் அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர். காலேஜில படிக்கும்போதே கதை எழுதுவதில் ஆர்வமுடன் இருந்தார். சொந்தம் 16, தாயா தாரமா படங்களில் வேலை பார்த்தார். நல்ல கதை எழுதும் திறன் கொண்டவர். சிட்டிசன் படத்துக்கு அவர்தான் கோ டைரக்டர். தேவையான சீன் எது? தேவையில்லாத சீன் எதுன்னு ஆர்டர் பண்றவரு இவர்தான்.

ஆம்புலன்ஸ் கதை ஒண்ணு முதன்முதலா அவர் தான் சொன்னார். அஜித், விஜய்னு எல்லாருக்கும் அந்தக் கதை தெரியும். சூப்பர்குட் பிலிம்ஸ்சுக்கு வெளியே 20 பேரு உள்ளே 30 பேருன்னு இருப்பாங்க. எல்லாரும் உதவி இயக்குனர்கள், புதுசாக கதை சொல்ல வந்தவர்கள், நடிக்க வந்தவர்கள்னு இருப்பாங்க.

அந்தளவு 45 புதுமுக இயக்குனர்களுக்கு வாழ்வு கொடுத்தவர் ஆர்.பி.சௌத்ரி. அந்த வகையில் சூப்பர்குட் சுப்பிரமணியம் வந்து கதை சொன்னபோது ஏன்யா முதல் படமே இவ்வளவு பெரிய படத்துக்கான கதையை எடுத்துட்டு வந்துருக்கேன்னு கேட்டாராம். அதுவரை நம்ம கம்பெனியில ஒர்க் பண்ணுன்னு சொல்ல சுப்பிரமணியம்தான் கதை தேர்வு செய்வாராம்.

அப்புறம் சுப்பிரமணி எழுதிய கதை தான் பிரபஞ்சன். சிரஞ்சீவி அந்தக் கதையைக் கேள்விப்பட்டுக் கேட்டாரு. ஆனா கொடுக்கல. விஜய்க்கிட்ட கதையை சொல்ல எஸ்ஏசி செட்டாகல. விஜய் கதையைக் கேட்டு வேணாம்னுட்டாருன்னு சொல்லிடுறாரு. திறமை 30 சதவீதம். அதிர்ஷ்டம் 70 சதவீதம். இது இருந்தால் தான் சினிமாவில் ஜெயிக்க முடியும். இது உண்மை.

ஆம்புலன்ஸ் கதையை அப்படியே சுட்டு எடுத்தாங்க. இது இதயத்தைக் கொண்டு போற கதை. இதுக்கு பேரு அறிவு திருட்டு. ஒரு கட்டத்துல நமக்கு வேற வழியில்லன்னதும்தான் முண்டாசுப்பட்டில நடிகனா ஒரு வாய்ப்பு வந்தது. அதுதான் செகண்ட் இன்னிங்ஸ்.


சிட்டிசன் படத்துல வேலை செய்யும்போது அஜித் சொன்னாராம். நீங்க போய் ஒரு ஹிட் கொடுத்துட்டு வாங்க. நான் நடிக்கிறேன்னாராம். அவர் மட்டும் சக்சஸ் டைரக்டரா இருந்தாருன்னா விக்ரமன், கேஎஸ்.ரவிகுமார், ஹரி வரிசையில் பக்கா கமர்ஷியல் டைரக்டரா இருந்துருப்பாரு. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News