பாட்ஷா படத்துக்கு ஒன்லைன் சொன்னது அவரா? பிரபலம் சொல்லும் பல ஆச்சரியங்கள்
பாட்ஷா படம் ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல் கல். மறக்கவே முடியாத படம். இந்தப் படத்திற்கான ஒன்லைனைச் சொன்னது யார் என்பது குறித்து பல சுவாரசியமான தகவல்களை பிரபல பத்திரிகையாளர் வெங்கட் சொல்கிறார். என்னன்னு பார்க்கலாமா...
பாட்ஷாவை வந்து ரஜினிசார் ரொம்ப ரசிச்சிப் பார்த்த படம்னு சொன்னார். அண்ணாமலை படத்துல தான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் ரஜினி முதன்முறையாக இணைகிறார். ரஜினிசாருக்கு ரொம்ப நாளா ஒரு லைன் ஓடிக்கிட்டே இருக்கு. ஏற்கனவே வில்லனா நடிச்சிட்டாரு.
ரஜினி ஒன்லைன்: இதுக்கு அப்புறம் மாஸ் ஸ்டைலிஷான ஒரு டானா நடிக்கணும். நல்லா சென்டிமென்ட் இருக்கணும்னு ஒரு லைன் ரெடி பண்ணிருக்காரு. ரெடி பண்ணினதும் யாருக்கிட்ட சொல்லலாம்னு அவருக்கு சின்ன குழப்பம் வந்துருக்கு.
பி.வாசு, ராஜசேகர்னு பலரையும் பற்றி யோசித்தார். ஆனால் அதுக்கு நல்ல டைரக்டர் வேணும்னு நினைச்சார். அந்த நேரத்தில் தான் அண்ணாமலை வந்தது. அந்தப் படத்துக்கு சுரேஷ் கிருஷ்ணா தான் டைரக்டர்.
சுரேஷ் கிருஷ்ணா: அவரோட மேக்கிங் ஸ்டைல், ஸ்பீடு, சாப்டான கேரக்டரைப் பார்க்கும்போது ரஜினிக்கு அவருதான் நினைவுக்கு வர்றாரு. அவரு கரெக்டா இருப்பாருன்னு பட்டது. அதனால அவரிடம் அந்த ஒன்லைனைச் சொல்றாரு. இது பயங்கர ஸ்டைலிஷா இருக்கே சார்னு சுரேஷ் கிருஷ்ணா சொல்றாரு.
உங்களுக்கு ரொம்ப பொருத்தமான படம்னு அவர் சொல்லவும், நீங்கதான் டைரக்ட் பண்றீங்கன்னுட்டாரு ரஜினி. இப்படி உருவானதுதான் பாட்ஷா. அதே மாதிரி இந்தியிலும் ஒரு டான் படம் பண்ணிருக்காங்க. அதை எல்லாம் பார்க்கும்போது தமிழுக்கு ஏற்ற மாதிரி இதை உருவாக்குறாங்க.
ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி: பாட்ஷா படத்தை ரஜினி சார் சத்யா மூவீஸைக் கூப்பிட்டு சொல்றாரு. அவங்க ஓகே சொன்னதும் படம் ரெடியாகுது. சீன் பை சீனுக்கு ரஜினியை வேற லெவலுக்குக் கொண்டு போறார் சுரேஷ் கிருஷ்ணா. ரஜினி சாரே சிபாரிசு செய்தது தான் ரகுவரன். அதே போல ஆனஸ்ட்ராஜ் படம் பார்த்துட்டு இன்னொரு கேரக்டருக்கு தேவனைப் போடுறாரு. அப்போ நக்மா டாப்ல இருந்ததால அவங்க ஹீரோயின் ஆகுறாங்க.
இந்தப் படத்துல நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரின்னு ஒரு பஞ்ச் டயலாக் வரும். அப்போ சுரேஷ்கிருஷ்ணா ஒரு பஞ்ச் சொல்றாரு. நான் நானா இருக்குற வரைக்கும் நீ நீயா இருப்பன்னு சொல்றாரு. இதுக்குள்ள ஒரு அழுத்தம் இல்லன்னு ரஜினி ஃபீல் பண்றாரு.
திருப்பதிசாமி: அந்த டயலாக்குக்கு பயரா ஸ்டைல் வர மாட்டேங்குது. அப்போது அவரிடம் அசிஸ்டண்டாக இருந்தவர் திருப்பதிசாமி. அவர் தனது குழுவினர் அதிகமாகப் பேசிக்கிட்டு இருந்ததைக் கண்டு டென்ஷன் ஆனார்.
டேய் நான் ஒரு தடவைதான்டா சொல்வேன். 100 தடவை சொல்ல வைக்காதேன்னு சொல்றாரு. அதை ரஜினி கேட்டதும் அவருக்கிட்ட திரும்ப திரும்ப கேட்காரு. உடனே ஒரு 10 நிமிஷம் டைரக்டர்கிட்ட டைம் கேட்குறாரு. படக்குழுவினரே பதற்றப்படுறாங்க. சுரேஷ்கிருஷ்ணா அசிஸ்டண்ட் கிட்ட டேய் என்னடா சொன்னன்னு கேட்குறாரு.
ரஜினி சொன்ன பஞ்ச்: நடந்ததை அவரும் சொல்றாரு. அப்புறம் ரஜினி வந்துடறாரு. லைட்டை எல்லாம் ஆப் பண்ணச் சொல்லிட்டு நான் டயலாக் பேசும்போது லைட் போடுங்க. சூட் பண்ணுங்கன்னு சொல்றாரு. அப்படி ஸ்டைலா சட்டையைத் தள்ளிவிட்டபடி ரஜினி சொன்ன பஞ்ச் தான் அந்த டயலாக். ரொம்ப மாஸா இருக்கு. இதையே வச்சிக்கலாம்னு சொல்லிடறாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.