சூப்பர்ஸ்டாரை கோலிவுட் நம்பவே இல்லையே… அப்போ விஜய்தான் ஒஸ்தியா? இத நோட் பண்ணுங்க..!

சூப்பர்ஸ்டார் கூலி படத்திலும் விஜய் தளபதி69 படத்திலும் நடித்து வருகின்றனர்/

By :  Akhilan
Update: 2024-09-29 09:30 GMT

Vijay: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு போட்டியாக சமீப வருடங்களாக நடிகர் விஜய் களம் கண்டு வருகிறார். இருவருக்கு இடையில் யார் தான் மாஸ் என்ற கேள்வி தொக்கி நிற்கும் நேரத்தில் தற்போது ஒரு ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகிறது.

70களில் தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்று வரை கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கடந்த சில வருடங்களாக அவரை கடந்து விஜய் கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

அதிலும் ஒரு திரைப்பட விழாவில் நடிகர் விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என பிரபல நடிகர் சரத்குமார் கூறியது சர்ச்சையானது. இதற்கு ரசிகர்கள் ஒரு பக்கம் காட்டமாக பதில் கூறினாலும் பிரபலங்களும் விஜய் பக்கமும், ரஜினி பக்கமும் சாய்ந்தனர்.

ஒரு ஒரு படத்துக்கும் இருவருக்கும் சம்பளம் கோடிக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. படத்தின் பட்ஜெட்டும் பெரிய அளவில் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதில் நடிகர் விஜய் மட்டும் தான் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் தயாரிப்பாளரை மாற்றிக் கொண்டே இருக்கிறார்.

ஏஜிஎஸ், எக்ஸ் பி, 7 ஸ்கீரின் ஸ்டுடியோஸ், சன் பிக்சர்ஸ்,எஸ் வி சி தற்போது கேவிஎன் என முன்னணி தயாரிப்பாளர்களுக்கு விஜய் படம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் 2018ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இரண்டே இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்து வருகிறார்.

அந்த வகையில் 2.0 திரைப்படத்தை லைக்கா நிறுவனமும், பேட்ட சன் பிக்சர்ஸ், தர்பார் லைக்கா, அண்ணாத்த சன் பிக்சர்ஸ், லால் சலாம் லைக்கா, வேட்டையன் லைக்கா, கூலி சன் பிக்சர்ஸ் என ரஜினிகாந்த் மாற்றி மாற்றி நடித்து வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மற்ற நிறுவனங்கள் ரஜினியை வைத்து படம் இயக்க முன்வரவில்லை அல்லது சூப்பர் ஸ்டார் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லையா எனவும் பேசி வருகின்றனர்.

Tags:    

Similar News