மெய்யழகனைப் பெரிய படம்னு நினைச்சாங்க... ஆனா அந்தளவுக்கு தியேட்டரே கிடைக்கலயே!

ஆனாலும் இம்புட்டு அலும்பு ஆகாதுப்பான்னு சொல்வாங்களே... அது இதுக்குத்தானா..!

By :  sankaran
Update: 2024-09-29 11:30 GMT

கார்த்தி, அரவிந்த சாமி நடிப்பில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள படம் மெய்யழகன். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. படத்தை இயக்கியவர் 96 பட இயக்குனர் பிரேம்குமார். இந்தப் படத்திற்குப் போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி. அதற்கு என்ன காரணத்தை முன்வைக்கிறார்னு பார்க்கலாமா...

தேவாரா படம் பான் இண்டியா மூவியா இருந்தாலும் தமிழ்நாட்டுல பெரிய அளவில் ரீச் இல்லை. அதை அவங்க தெலுங்கு டப்பிங் படமாகத் தான் பார்க்குறாங்க. அதே சமயத்துல அல்லு அர்ஜூன், ராம்சரண் அளவுக்கு ஜூனியர் என்டிஆர் இங்கு பிரபலம் கிடையாது.

ஆனா ஆந்திராவுலயும், யுஎஸ்லயும் படம் நல்லா ரீச் ஆகியிருக்கு. யுஎஸ்ல இருக்குற பல ஐடி கம்பெனில வேலை பார்க்குறவங்க ஆந்திராவைச் சேர்ந்தவங்க. அதனால அங்கே தெலுங்கு படத்துக்கு நல்ல வரவேற்பு உண்டு.

மெய்யழகனைப் பொருத்தவரை தமிழ்நாட்டுலயே அதுக்குப் போதிய தியேட்டர்கள் கிடைக்கல. அதுதான் முக்கியமான விஷயம். அந்தப் படத்தை எடுத்த 2டி நிறுவனத்தாருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இந்தப் படம் ஒரு மிகப்பெரிய படம் அப்படிங்கற நினைப்பு இருந்தது


ஆனா ரியாலிட்டி வேற. இங்க உள்ள தியேட்டர்காரங்க எல்லாம் என்ன நினைச்சாங்கன்னா மெய்யழகனோடு கம்பேர் பண்ணும்போது அவங்க எல்லாரும் தேவாராவுக்குத் தான் கூட்டம் வரும்னு நினைச்சி பெரிய ஸ்க்ரீன்ல எல்லாம் தேவாரா படத்துக்கு 3 காட்சி வரை அலார்ட் பண்ணிட்டாங்க.

அப்போ இவங்க என்ன சொன்னாங்கன்னா எங்களுக்கு 4 ஷோ வரை தந்தால் தான் படத்தைக் கொடுப்போம்னு சொல்லிட்டாங்க. அதனாலயே தியேட்டர்கள் குறைஞ்சிப் போச்சு. எனக்குத் தெரிஞ்சி 240 தியேட்டர்கள் தான் மெய்யழகன் படத்துக்குக் கிடைச்சிருக்கு.

இவங்க இந்த மாதிரி வெட்டிப்பந்தா இல்லாம நார்மலா களநிலவரத்தைப் புரிஞ்சிக்கிட்டு படத்தைக் கொண்டு வந்துருந்தாங்கன்னா இன்னும் நிறைய ஸ்க்ரீன்ஸ் கிடைச்சிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News