விஜயின் 2வது மாநாடுக்கு வரவேற்பு கிடைக்குமா? ஜனநாயகன் ரிலீஸ்ல பிரச்சனை வருமா?
விஜயின் கடைசி படமான ஜனநாயகன் குறித்தும் அவரது அரசியல் நிலைப்பாடு குறித்தும் பிரபல சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
விஜயின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்தது. ஒரு நடிகர் என்பதால் அங்கு கூட்டம் வந்தது. 2வது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்டு 25ல் நடக்கிறது. இது எல்லாரும் வந்து போற இடம். 20 லட்சம் பேர் வரை வர வாய்ப்பு இருக்கு. விஜயைப் பொருத்தவரை சினிமாக்காரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டாருன்னுதான் நான் நினைக்கிறேன். தாடி பாலாஜிலாம் வந்து சேர்ந்தாரு.
ஆனா ஒரு சின்ன பதவி கூட கொடுக்கல. 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் நினைத்தது நடப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. திமுக, அதிமுகவுக்கு 35 பர்சன்டுக்கு மேல வாக்கு வாங்கி இருக்கு. இன்றைய சூழலில் விஜய் தனித்து நிற்கத்தான் வாய்ப்பு இருக்கு. 2026ல் விஜய் சிஎம் ஆக வாய்ப்பு இல்ல. 2031ல் வேண்டுமானால் அதற்கு வாய்ப்பு இருக்கு. ூூ
உண்மையைச் சொல்லப்போனா விஜய் 5 பர்சன்ட்டுக்கு மேல வாக்கு வாங்க மாட்டாரு. அதுதான் என்னோட தனிப்பட்ட கருத்து. திமுக, அதிமுக இவங்க ரெண்டு பேரோட வாக்குகளைக் கூட்டினாலே 75 பர்சன்ட் வரை வந்துடும். தமிழக உளவுத்துறை ஒரு சர்வே பண்ணிருக்காங்க. அதுல விஜய்க்கு டபுள் டிஜிட்ல வாக்கு கிடைக்கும்னு ஒரு ரிப்போர்ட் போயிருக்கு.
அதுக்குப் பிறகுதான் திமுக விஜயை சீரியஸா பார்க்க ஆரம்பிச்சாங்க. ஒவ்வொரு சர்வேயிலும் விஜய்க்கு 27 சதவீதம் வரை வாக்கு கிடைப்பதாக சொல்லப்படுகிறது. ஆளும் கட்சியின் அதிருப்தி வாக்குகள் எங்கே போகுதோ அவர்கள் வெற்றி பெறுவதற்கான சூழல் வரும். அப்படித்தான் கடந்த முறை 2 தடவை அதிமுக ஆட்சியைப் பிடிச்சாங்க.
இப்போது விஜய் கட்சி ஆரம்பித்ததால் விஜய் கட்சி பக்கம்தான் அந்த அதிருப்தி வாக்குகள் வர வாய்ப்பு இருக்கு. அதிமுகவுடன் பாஜக இணைந்ததால் படுதோல்வி அடைவதற்கான வாய்ப்புகள்தான் இருக்கு. 2026க்குப் பிறகு விஜய் நடிக்க வாய்ப்பு இருக்கு. ஜனநாயகன் ரிலீஸ் ஆகும்போது பிரச்சனைகள் வரும். ஆனா அது சட்ட ஒழுங்கைப் பாதிக்கும் வகையில் வராது. அந்தப் படம் கடைசி என்பதால் நிச்சயம் வெற்றி பெறும்.
அதில் அரசியலும் இருக்கு. ஆனா மசாலா படம். விஜய் பட வசூல் சாதனையை தகர்க்க திமுக அதே நாளில் பராசக்தியை ரிலீஸ் பண்ணுவாங்க. ஆனா அதையும் தாண்டி ஜனநாயகன் வசூல் சாதனையைப் படைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.