அம்மா இறந்ததுக்குப் பிறகு தான் யுவனுக்கு அந்தப் பழக்கமாம்... இளையராஜாவின் மறக்கமுடியாத விசிட்!

யுவன் சொல்லும் உணர்வுப்பூர்வமான சில அபூர்வ தகவல்கள்

By :  sankaran
Update: 2024-10-12 06:33 GMT

யுவன் சங்கர் ராஜாவை நமக்கு மியூசிக் டைரக்டராகத் தான் தெரியும். ஆனால் அவருக்குள் ஒரு ஆழமான புரிதல் ஒன்று உள்ளது. காதல், பாசம், கடவுள் என பலவற்றையும் பற்றிப் பேசினால் அடித்துத் தூள் கிளப்புகிறார். அந்த உணர்வுகளில் காதல் பற்றி சொல்லும்போது அதில் யதார்த்தம் அதிகமாக உள்ளது. ரொம்ப அனுபவித்தவர்களால் மட்டுமே இந்த அளவுக்குப் புரிதலுடன் பேச முடியும். அப்படி அவர் தனது அனுபவங்களின் வாயிலாக என்னென்ன சொல்கிறார்னு சுருக்கமாகப் பார்ப்போம்.

அம்மா இறந்ததுக்குப் பிறகு மது அருந்துவது, புகை பிடிப்பது என பழக்கங்கள் வந்துவிட்டன. அதற்கு முன்பே பார்ட்டி எல்லாம் போவேன். ஆனா மது அருந்த மாட்டேன். புகை பிடிக்க மாட்டேன். அது மாதிரி தங்கையை இறந்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனா நான் மிஸ் பண்றேன்.


அப்படித்தான் மேல இருந்து ஒருத்தன் எழுதிட்டான். அது படி தான் நடக்கும். இன்னைக்கு ப்ளூ டீசர்ட் போட்டு மீட்டிங் அட்டண்ட் பண்ணினா அது சக்சஸ் ஆகிடுது. அப்படிங்கறப்போ அதே டீசர்ட் நமக்கு ராசியானதா மாறிடுது. நம்மைப் படைச்சது இறைவன் தான். அவனால் மட்டும் தான் அம்மா எப்படி எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்களோ அதுக்கும் மேல சொல்லித் தருவது அவர் தான்.

அப்பா ரொம்ப பிசி. மகள் பிறந்ததும் தான் அவர் கொஞ்சம் ப்ரீயாக இருந்தார். சின்ன வயசுல இருந்து நான் அப்பா வர மாட்டாங்களான்னு ஏங்கிருக்கேன். ஒரே ஒரு தடவை ஸ்கூல் படிக்கும்போது வந்து கட்டிப்பிடிச்சாரு. நான் எப்போ வருவீங்கன்னு கேட்பேன்.

அந்த டைம் சொல்வாங்க. கரெக்டா போயிடுவேன். ஒரு தாய் வந்து பிள்ளையை லவ் பண்றது தான். காதலுக்கு நிபந்தனை கிடையாது. அப்படிப் போட்டால் அது நிலைச்சி நிக்காது. காதலை நினைச்சி ஏங்கிய பாடல்னா காதலின் தீபம் ஒன்று, காதல் ரோஜாவே, சகானா ஆகிய பாடல்களைச் சொல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News