சூப்பர்ஸ்டாருடன் இணைந்த ரியல் ஸ்டார் கதை தெரியுமா? படா மாஸா இருக்கே!
சன் பிக்சர்ஸ் ரஜினியை வைத்து தயாரித்து வரும் பிரம்மாண்டமான படம் கூலி. இந்தப் படத்தை இயக்கி வருபவர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் டீசரே அதகளப்படுத்தியது.
Also read: இப்படிச் சூடு… வேட்டையன் மனசிலாயோ சிங்கிள்… மலேசியா வாசுதேவன் வாய்ஸ் கொண்டு வந்த காரணம்
படத்தில் ரஜினியுடன் சத்யராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடிக்கிறார்கள். அதே போல் நாகர்ஜூனா, சுருதிஹாசனும் நடிக்கிறார். இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவும் இணைந்துள்ளார் என்பது வரவேற்கத் தக்க விஷயமாக இப்படி உள்ளது. இவர் யார்? எப்படிப்பட்டவர்னு பார்க்கலாமா...
கூலி படத்துக்கு டெய்லி ஒரு அப்டேட், பரபரப்பு வந்துக்கிட்டு இருக்கு. கன்னட நடிகர் உபேந்திரா வர்றாரு. இந்தியாவுலயே ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் தான். அது ரஜினிகாந்த் தான் என்கிறார் உபேந்திரா. கூலியில் கல்லீஷா என்ற கேரக்டரில் நடிக்கிறார் உபேந்திரா.
ரொம்ப போராடி கன்னடத்துல ஒரு டைரக்டராக வந்தார் உபேந்திரா. சிவராஜ்குமாரை வைத்து ஓம் என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்தை 500 முறை ரீமேக் செய்யப்பட்டது. அப்போது தான் உபேந்திரா யார் என தெரிந்தது.
அப்புறம் அவர் பார்க்க தலைமுடி ஸ்டைலாக இருப்பதால் நடிக்க வந்தார். அந்தப் படத்தின் பெயர் ஏ. இதுல அவர் தான் ஹீரோ. இந்தப் படத்தில் கர்நாடகாவில் உள்ள நிஜ ரவுடிகளை நடிக்க வைத்தார். அதனால் தான் அவரை ரியல் ஸ்டார்னு சொன்னாங்க.
அவரோட திங்கிங், ஆக்டிங் வித்தியாசமா இருக்கும். அவர் ஒரு ஸ்கிரிப்ட் எழுதுறாரு. தமிழக சூப்பர்ஸ்டார் ரஜினியும், கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரும் நடிச்சா படம் சூப்பர்ஹிட்டா இருக்கும்னு நினைச்சி கதையை ரஜினியிடம் சொல்கிறார். அப்புறம் ராஜ்குமாரும், ரஜினியும் பேசிக்கிறாங்க. அதுல நிறைய கான்ட்ரோவர்சிகள் இருக்குன்னு அதை மறுத்துவிட்டார்களாம்.
அதுல உபேந்திராவுக்கு ரொம்ப மன வருத்தம். அதை ஆறப்போட்டு அந்தக் கதையில் உபேந்திராவும், பிரபுதேவாவும் இணைந்து நடிக்கிறாங்க. அது தான் H2O. இந்தப் படம் கர்நாடகாவில் சர்ச்சையைக் கிளப்பியது. தமிழகத்துக்கு சாதகமாகி விட்டது என்கிறார்கள். மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.