விஜய்.. விஜய் சேதுபதி.. விஜயகாந்த்!.. கோலிவுட்டில் அதிகரிக்கும் டீஏஜிங்!.. ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்தான்!..
De aging: சமீபகாலமாக டீஏஜிங் தொழில்நுட்பம் என்கிற வார்த்தை தமிழ் சினிமா தொடர்பான செய்திகளில் அதிகம் பார்க்கப்படுகிறது. தமிழ் திரையுலகில் இதுவரை டீஏஜிங் அதிகம் பயன்படுத்தப்படதில்லை. ஹாலிவுட்டில் இதை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு நடிகரை அவர் 15 வயதில் எப்படி இருப்பார் என அப்படியே நம்ப வைப்பது போல காட்டுவதுதான் டீஏஜிங் அதேபோல், உயிரோடு இல்லாத ஒரு நடிகரையே டீஏஜிங் மூலம் திரையில் கொண்டு வரமுடியும். எம்.ஜி.ஆரை வைத்து அப்படி ஒரு படத்தை எடுக்கும் […]
De aging: சமீபகாலமாக டீஏஜிங் தொழில்நுட்பம் என்கிற வார்த்தை தமிழ் சினிமா தொடர்பான செய்திகளில் அதிகம் பார்க்கப்படுகிறது. தமிழ் திரையுலகில் இதுவரை டீஏஜிங் அதிகம் பயன்படுத்தப்படதில்லை. ஹாலிவுட்டில் இதை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு நடிகரை அவர் 15 வயதில் எப்படி இருப்பார் என அப்படியே நம்ப வைப்பது போல காட்டுவதுதான் டீஏஜிங்
அதேபோல், உயிரோடு இல்லாத ஒரு நடிகரையே டீஏஜிங் மூலம் திரையில் கொண்டு வரமுடியும். எம்.ஜி.ஆரை வைத்து அப்படி ஒரு படத்தை எடுக்கும் திட்டம் கூட சிலருக்கு வந்தது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து உருவான ‘ஆதவன்’ படத்தில் சூர்யாவை 12 வயது சிறுவனாக காட்டியிருப்பார்கள். சரியாக சொன்னால் தமிழ் சினிமாவின் முதல் டீஏஜிங் இதுதான்.
அதன்பின் அதை யாரும் முயற்சி செய்யவில்லை. ஆனால், இப்போது பல இயக்குனர்களும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கிவிட்டார்கள். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் 20 வயது வாலிபராக ஒரு வேடத்தில் வருகிறார் விஜய். இதற்கு டீஏஜிங் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த பணியை தமிழ்நாட்டில் செய்யமுடியாது. அமெரிக்காவில்தான் இதற்கான கலைஞர்கள் இருக்கிறார்கள். அதற்காகத்தான் கோட் படம் துவங்குவதற்கு முன் விஜயும், வெங்கட்பிரபும் அமெரிக்கா சென்றனர். இப்போது கோட் படத்தில் டீஏஜிங் மூலம் கேப்டன் விஜயகாந்தை திரையில் கொண்டு வர வெங்கட்பிரபு திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதேபோல், விடுதலை 2 படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியை டீஏஜிங் பயன்படுத்தியே காட்ட திட்டமிட்டிருக்கிறார் வெற்றிமாறன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்திலும் டீஏஜிங் மூலம் ரஜினியை இளமையாக காட்ட திட்டமிட்டிருக்கிறார்கள் என ஏற்கனவே செய்திகள் வெளியானது.
போகுற போக்கை பார்த்தால் இனிமேல் பல இயக்குனர்களும் இந்த டீஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவகையில் ஹாலிவுட் பட பாணியில் தமிழ் சினிமாவும் முன்னேறி வருவது ஆரோக்கியமான விஷயம்தான்.