பிரியங்கா மோகனை தட்டி தூக்கிய தனுஷ்.!? இது ஒன்னும் நம்மாளுக்கு புதுசில்லையே..,

by Manikandan |
பிரியங்கா மோகனை தட்டி தூக்கிய தனுஷ்.!? இது ஒன்னும் நம்மாளுக்கு புதுசில்லையே..,
X

தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் ரிலீஸ் ஆக தயாராகி வருகிறது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தற்போது ரெடியாகி விட்டன.

அதேபோல, தெலுங்கு - தமிழ் என இரு மொழி படமாக உருவாகி வரும் வாத்தி படமும் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இதனை தொடர்ந்து ராக்கி, சாணி காயிதம் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் தனுஷ்.

இந்த திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதைக்களம் என கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு தற்போது பிரியங்கா மோகனிடம் படக்குழு பேசி வருகிறதாம். விரைவில், இதில் நடிக்கிறாரா இல்லையா என்பது தெளிவாகி விடும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் - மொத்தமா 10 ஹீரோயின்கள்.! நடுவில் முரட்டு காளையாக நம்ம அண்ணாச்சி.! டிக்கெட் வாங்கிட்டு வந்துருங்க..,

தனுஷிற்கு இது புதிதல்ல, ஏற்கனவே இதுபோல் பலமுறை நடந்துள்ளது. அதாவது அந்த சமயம் அதிகமாக பேசப்படும் நடிகையை தனுஷ் பட கதாநாயகியாக மாற்றிவிடுவர். அப்படித்தான் ஸ்ரேயா, ஹன்சிகா, சாய்பல்லவி, கீர்த்தி சுரேஷ், ஆகியோரின் ஆரம்பகாலப் படங்களில் தனுசுடன் இணைந்து நடித்து இருப்பர்.

அதுபோல, தற்போது டான், டாக்டர், எதற்கும் துணிந்தவன் படங்கள் மூலம் அதிக ரசிகர்களை பெற்றுள்ள பிரியங்கா மோகனை தனுஷின் அடுத்த படத்திற்காக படக்குழு பேசி வருகிறது என்று பரவலாக செய்தி பரவி வருகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Next Story