கோலிவுட்டிலே நிறைய கிடக்கு… இதுல இந்த புது உருட்டு தேவையா? தனுஷின் அடுத்த பட அறிவிப்பு…

Dhanush: சினிமாவில் தனுஷ் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறார். ஒரு பக்கம் தொடர்ந்து நடிப்பு இன்னொரு பக்கம் இயக்கம் என பன்முகம் காட்டும் தனுஷ் தற்போது மீண்டும் இந்தி திரையுலகில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தில் அவருடன் நாகர்ஜூனா இணைந்துள்ளார். பிச்சைக்காரராக தனுஷ் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தினை முடிக்க இருக்கிறார் தனுஷ். இதையும் படிங்க: எப்பா சூரி நீயா […]

By :  Akhilan
Update: 2024-05-31 02:24 GMT

Dhanush: சினிமாவில் தனுஷ் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறார். ஒரு பக்கம் தொடர்ந்து நடிப்பு இன்னொரு பக்கம் இயக்கம் என பன்முகம் காட்டும் தனுஷ் தற்போது மீண்டும் இந்தி திரையுலகில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தில் அவருடன் நாகர்ஜூனா இணைந்துள்ளார். பிச்சைக்காரராக தனுஷ் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தினை முடிக்க இருக்கிறார் தனுஷ்.

இதையும் படிங்க: எப்பா சூரி நீயா இப்படி நடிச்சிருக்கே? படத்துக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லை..! பயில்வான் விமர்சனம்

இப்படத்தினை தொடர்ந்து அவர் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருக்கிறாராம். ராயன் படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் வேலைகளையும் தனுஷ் கவனித்து வருகிறார். ஜூன் 13ந் தேதி ரிலீஸ் செய்யப்பட இருந்த ராயன் தள்ளிப்போய் இருக்கிறது.

ஜூலை 26ந் தேதி இப்படத்தினை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. 28ந் தேதி தனுஷ் பிறந்தநாள் என்பதால் ராயன் படத்தின் வெற்றி கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தினை தொடர்ந்து இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இளையராஜா படத்திற்கு முன்னர் இன்னொரு படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: பிரேமலு பிரபலத்தை வளைத்து போட்ட குட் பேட் அக்லி டீம்… கூடவே இன்னொரு வில்லன் நடிகரும் வராராம்!…

ஏர் போர்ஸில் நடக்கும் காதல்கதையாக இப்படம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ராஞ்சனா, அட்ராங்கி ரே படத்தினை போல இப்படமும் காதலை முழுவதும் மையமாக கொண்டிருக்குமாம். சேகர் என்ற கேரக்டர் பெயரில் தனுஷ் நடிக்க இருக்கிறார். மாரி செல்வராஜ் படத்திற்கு செல்லும் முன்னர் இப்படத்தினையும், இளையராஜாவின் பயோபிக்கையும் முடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Similar News