இதுதான் கரெக்ட் டைம்!.. சிவகார்த்திகேயனுக்கு கட்டம் கட்டிய தனுஷ்!.. தப்பிப்பாரா எஸ்.கே?!..
Dhanush : டிவி ஆங்கராக வேலை செய்து வந்த சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தவர் பாண்டிராஜ் என்றால் அவரை வளர்த்துவிட்டவர் தனுஷ்தான். தான் நடித்த 3 என்கிற படத்தில் சிவகார்த்திகேயனை தனது நண்பராக நடிக்க வைத்தார். அதேபோல், தனது சொந்த காசை போட்டு எதிர்நீச்சல் என்கிற படத்தை தயாரித்து சிவகார்த்திகேயனை உருவாக்கினார். மேலும், காக்கி சட்டை என்கிற படத்தையும் தயாரித்து அதில் சிவகார்த்திகேயனை நடிக்க வைத்தார். அதேநேரம், ஒருபக்கம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ […]
Dhanush : டிவி ஆங்கராக வேலை செய்து வந்த சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தவர் பாண்டிராஜ் என்றால் அவரை வளர்த்துவிட்டவர் தனுஷ்தான். தான் நடித்த 3 என்கிற படத்தில் சிவகார்த்திகேயனை தனது நண்பராக நடிக்க வைத்தார். அதேபோல், தனது சொந்த காசை போட்டு எதிர்நீச்சல் என்கிற படத்தை தயாரித்து சிவகார்த்திகேயனை உருவாக்கினார்.
மேலும், காக்கி சட்டை என்கிற படத்தையும் தயாரித்து அதில் சிவகார்த்திகேயனை நடிக்க வைத்தார். அதேநேரம், ஒருபக்கம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் மூலம் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக மாறினார். திரையுலகில் மிகவும் குறிய காலத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார்.
இதையும் படிங்க: கடைசி 40 நிமிஷம் சூப்பர்!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்க்கு தனுஷ் கொடுத்த விமர்சனம்.. ப்ளூ சட்டை கலாய்!..
ஒருகட்டத்தில் தனுஷை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறி தனுஷுக்கே ஷாக் கொடுத்தார். அதோடு, தனுஷ் படங்களுக்கு இசையமைத்து வந்த அனிருத்துடன் கூட்டணி அமைத்து தான் நடிக்கும் படங்களுக்கு அவரை இசையமைக்க வைத்தார். இதில், கடுப்பான தனுஷ் சிவகார்த்திகேயனுடன் பேசுவதையை நிறுத்திவிட்டார்.
கடந்த பல வருடங்களாகவே இருவரும் பேசிக்கொள்வதில்லை. இந்நிலையில்தான் சமீபத்தில் இசையமைப்பாளர் இமான் கொடுத்த பேட்டி சிவகார்த்திகேயனின் இமேஜை டேமேஜ் செய்துவிட்டது. இதையடுத்து வெளியே வருவதையே சிவகார்த்திகேயன் தவிர்த்து வருகிறார்.
இதையும் படிங்க: தீபாவளி ரேஸில் தளபதியை முந்திய உலகநாயகன்!.. இது எப்போ நடந்துச்சுன்னு தெரியுமா?..
சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சிவகார்த்திகேயனை காலி பண்ண இதுதான் சரியான நேரம் என கணித்த தனுஷ் அவரின் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தையும் பொங்கலுக்கே வெளியிடுவதாக அறிவித்துவிட்டார்.
கேப்டன் மில்லர் டிசம்பர் மாதம்தான் வெளியாகவிருந்தது. ஆனால், இப்போது வேறு திட்டத்தை போட்டுவிட்டார் தனுஷ். பொங்கல் ரேஸில் கேப்டன் மில்லர் முந்தினால் அயலான் படத்தின் வசூல் கண்டிப்பாக பாதிக்கும். இதில், எது நடக்கபோகிறது என்பதை ரிலீஸ் தேதியன்று தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: எக்ஸ் பொண்டாட்டி எங்க ஓடினாலும் துரத்தி வரும் தனுஷ்!.. மாமனாருக்கும் வேட்டு வைக்கப் போறாரா?