தலப்பாக்கட்டியை சீண்டுகிறாரா நயன்தாரா?.. அடுத்த படத்தின் பெயரை பார்த்தீங்களா!..
நயன்தாராவின் அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அந்த படத்தின் டைட்டிலை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி ஒரு டைட்டிலில் லேடி சூப்பர் ஸ்டார் நடிக்கிறாரே என ஆச்சரியமாக பார்த்து வரும் நிலையில், படத்திற்குள் பயங்கர உள்குத்து இருக்கலாம் என நெட்டிசன்கள் சர்ச்சை கமெண்டுகளை போட்டு வருகின்றனர். டியூட் விக்கி இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையில் நயன்தாரா நடிக்க உள்ள படத்திற்கு வித்தியாசமாக மண்ணாங்கட்டி எனும் டைட்டிலை வைத்துள்ளனர். இந்த படம் சமையல் […]
நயன்தாராவின் அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அந்த படத்தின் டைட்டிலை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி ஒரு டைட்டிலில் லேடி சூப்பர் ஸ்டார் நடிக்கிறாரே என ஆச்சரியமாக பார்த்து வரும் நிலையில், படத்திற்குள் பயங்கர உள்குத்து இருக்கலாம் என நெட்டிசன்கள் சர்ச்சை கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.
டியூட் விக்கி இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையில் நயன்தாரா நடிக்க உள்ள படத்திற்கு வித்தியாசமாக மண்ணாங்கட்டி எனும் டைட்டிலை வைத்துள்ளனர். இந்த படம் சமையல் தொடர்பான சார்ந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இவரு அட்லிக்கே அண்ணனா இருப்பாரு போல!.. லியோ பட போஸ்டர்களை எங்கே இருந்து சுட்டு இருக்காங்க பாருங்க!..
மண்ணாங்கட்டி கீழே உள்ள Since 1960 எனும் வாசகம் தான் தற்போது சர்ச்சையை தூண்டியுள்ளது. பிரபல உணவு நிறுவனமான தலப்பாக்கட்டியைத் தான் இந்த படத்தின் மூலம் நயன்தாரா சீண்டுகிறாரா என்கிற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
தலப்பாக்கட்டி கீழே since 1957 என்கிற வரிகள் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மண் பாண்டங்களை வைத்து சமைக்கும் சமையல் நிறுவனம் என்பதை போல தலப்பாக்கட்டியை மையமாக வைத்து இந்த படம் உருவாகப் போகிறதா? அல்லது அதிலிருந்து வெளியே வந்து அதற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட உணவகமாக இந்த படத்தின் கதையை இயக்குநர் டியூட் விக்கி உருவாக்கி உள்ளாரா என்பது சீக்கிரமே தெரிந்து விடும்.
இதையும் படிங்க: போற இடத்துல எல்லாம் பொய்!.. போதும் ரீலு அந்து போச்சி!.. எப்பதான் திருந்துவாறு விஷால்?!..
ஆனால், மோஷன் போஸ்டரில் நீதி தேவதை எல்லாம் கூண்டில் நிற்க வைத்திருப்பதன் பின்னணி என்ன? என்கிற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. கண்டிப்பாக நயன்தாராவுக்கு மண்ணாங்கட்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் சமீப காலமாக லேடி சூப்பர்ஸ்டாருக்கு பெரிதாக கை கொடுக்காத நிலையில், மண்ணாங்கட்டி அந்த நிலையை மாற்றும் என்றும் கூறுகின்றனர்.