படம் முழுவதும் எடுத்த பின் ஹீரோவை மாற்றச் சொன்ன ஏவிஎம் செட்டியார்... அடுத்து நடந்ததுதான் ஹைலைட்..!

ஏவிஎம் தயாரிப்பில் முற்றிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாடலே இல்லாமல் தமிழ்த்திரை உலகில் முதன்முதலாகப் படம் ஒன்று எடுத்தார்கள். அதுதான் அந்த நாள். இந்தப் படத்தில் நடித்த நடிகர் திலகத்துக்கும், ஏவிஎம் செட்டியாருக்கும் சின்ன மனக்கசப்பு. இதுகுறித்து பழம்பெரும் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். ஏவிஎம் செட்டியாருக்கு அந்த நாள் கதை மிகவும் பிடித்து விட்டது. மறைந்த மேதை எஸ்.பாலசந்தரை தகுதியான இயக்குனராக தேர்ந்தெடுத்து படத்தை எடுத்து விட்டார். முழுப்படமும் எடுத்ததும் போட்டுப் […]

By :  sankaran v
Update: 2023-11-19 01:00 GMT

Antha Naal

ஏவிஎம் தயாரிப்பில் முற்றிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாடலே இல்லாமல் தமிழ்த்திரை உலகில் முதன்முதலாகப் படம் ஒன்று எடுத்தார்கள். அதுதான் அந்த நாள்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர் திலகத்துக்கும், ஏவிஎம் செட்டியாருக்கும் சின்ன மனக்கசப்பு. இதுகுறித்து பழம்பெரும் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

ஏவிஎம் செட்டியாருக்கு அந்த நாள் கதை மிகவும் பிடித்து விட்டது. மறைந்த மேதை எஸ்.பாலசந்தரை தகுதியான இயக்குனராக தேர்ந்தெடுத்து படத்தை எடுத்து விட்டார். முழுப்படமும் எடுத்ததும் போட்டுப் பார்த்தார். அவருக்குத் திருப்தி இல்லை. பாடல்கள் இல்லை. பிரமாதமான நடனம் எதுவுமில்லை.

காமெடி கூட இல்லை. அது கூட அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் படத்தில் கதாநாயகனின் நடிப்பு திருப்தி இல்லை. என்ன படம் என்று அலுத்துக் கொண்டார். என்ன செய்யலாம் என்று யோசித்தார். நடித்தவருக்கு பணம் முழுவதும் செட்டில் பண்ணினார்.

Antha Naal Sivaji

கதாசிரியரையும், இயக்குனரையும் அழைத்தார். கதை நன்றாக இருக்கிறது. இயக்கம் நன்றாக இருக்கிறது. இப்போது எடுத்த படத்தைப் பெட்டிக்குள் போட்டு விடுவோம். மீண்டும் நான் சொல்பவரைக் கதாநாயகனாகப் போட்டு இதே படத்தை எடுங்கள். செலவானதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் என்றார்.

அவர் ஆலலோடு அவர் முகத்தைப் பார்த்தபோது அந்த கதாநாயகனின் பெயரைச் சொன்னார். ஆம். அவர் தான் சிவாஜிகணேசன். அப்போது செட்டியாருக்கும், சிவாஜிக்கும் இடையே சின்ன மனக்கசப்பு.

அதனால் தான் செட்டியார் இப்படி சொல்லி இருக்கிறார். இந்தச் சின்னக் கசப்பு என்னன்னா பராசக்தி படத்தில் ஒல்லிப்பிச்சானாக வரும் சிவாஜியின் தோற்றமும், பேசும் விதமும் நடிப்பும் புரியாத புதிராக இருந்நதது. அதனால் அப்போது வேறு நடிகரைப் போட்டு எடுக்கலாம் என செட்டியார் சொன்னார்.

மற்றவர்கள் சொல்வதைக் கேட்ட சிவாஜி என்னிடம் சொல்ல நான் அழுது இருக்கிறேன். ஆனால் அவருக்கு நான் கொஞ்சம் தெம்பு கொடுத்து நடிக்க வைத்தேன்.இந்த சின்னக்கசப்பு சிவாஜியின் மனதிலும் இருந்தது. அதனால் செட்டியார் விரும்பி அழைத்தபோது தனது வருமானத்தைக் கூட்டி ஒரு பெரிய தொகையாகச் சொன்னார்.

செட்டியாரோ எந்த அதிர்ச்சியும் இல்லாமல் அவர் கேட்ட தொகையைக் கொடுத்தார். அந்த நாள் தான் இந்த நாள் வரை பேசப்படுகிறது.

Tags:    

Similar News