சிவகார்த்திகேயனுக்கு ஆப்பு வைக்க ரெடியாகும் பாலா… அப்போ தயாரிப்பாளர் தலைல துண்டுதானா…

by amutha raja |
siva and bala
X

பாலா தமிழ் திரையுலக இயக்குனர்களில் ஒருவர். இவர் சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராய் அறிமுகமானார். இப்படத்தில் கதாநாயகனாக விக்ரம் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தது.

மேலும் பாலா அவன் இவன், நான் கடவுள், பரதேசி போன்ற திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி அடையாளத்தையே உருவாக்கி கொண்டார். மேலும் இவர் தற்போது நடிகர் அருண் விஜயின் நடிப்பில் வணங்கான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்கவிருந்த நிலையில் படபிடிப்பில் ஏற்பட்ட ஒரு சில காரணங்களால் சூர்யா இப்படத்தில் இருந்து விலகி கொண்டார்.

இதையும் படிங்க:இது சந்திரமுகியும் காஞ்சனாவும் கலந்த கலவைடா!.. எப்படி இருக்கு வேட்டையன் ஆட்டம்.. சந்திரமுகி 2 விமர்சனம்!

பின் அனைத்து திறமைகள் இருந்தும் இதுவரை எந்தவொரு வெற்றி படங்களையும் காணாத அருண் விஜய் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார். இப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளிவரவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானதை அடுத்து இந்த போஸ்டர் கூறும் அர்த்தங்கள் என்ன என்பது அனைவருக்குமே கேள்வி குறியாக உள்ளது.

இது ஒருபுறமிருக்க நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள அயலான் திரைப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இப்படமும் வருகின்ற பொங்கலுக்குதான் வெளியாகவுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் பல படங்கள் தோல்வியை சந்தித்தன.

இதையும் படிங்க:ஜெயம் ரவியின் ‘இறைவன்’ படம் எப்படி இருக்கு?!.. ரசிகர்கள் சொல்வது என்ன?..

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தின் மூலம் இவர் தந்து வெற்றியை மீண்டும் பதிவு செய்ய ஆரம்பித்தார். ஏற்கனவே கங்குவா, இந்தியன்2 போன்ற படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அப்படங்கள் அனைத்தும் தள்ளி போய்விட்டன. அந்த வாய்ப்பை பயன்படுத்த நினைத்த சிவகார்த்திகேயனுக்கு தற்போது பாலா இயக்கத்தில் வரும் வணங்கான் திரைப்படம் தடையாக இருக்குமோ என்ற கருத்துகள் நிலவி வருகின்றன.

ஆனால் நல்ல கதைகளாய் இருந்தால் அது யார் இயக்கியிருந்தாலும் சரி அப்படம் கண்டிப்பாக மக்கள் மனதில் இடம் பிடிக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது.

இதையும் படிங்க:நடிகைகள் மட்டுமா? சிம்புவை நம்பி தெருவில் நின்னவங்க பல பேரு!.. அட இத்தனை பேரா?…

Next Story