ஃபுல் நைட்டும் இளையராஜாவின் பாடலைக் கேட்டுக் கொண்டு இருந்த இயக்குனர்... எந்தப் படம்னு தெரியுமா?

இளையராஜாவின் பாடல்களை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் பிரபலங்களும் விதிவிலக்கல்ல. இங்கு பிரபல இயக்குனர் மிஷ்கின் இளையராஜாவைப் பற்றி என்ன சொல்கிறார்னு பார்ப்போம். எங்க அப்பா சினிமா பாடல்கள்ல கண்டசாலா மாதிரி பாடுவாரு. எங்க அம்மா பி.சுசிலா மாதிரி பாடுவாங்க. ரொம்ப ஆச்சரியமா இருக்கும். அந்த மாதிரி சூழல்ல தான் வளர்ந்தேன். இதையும் படிங்க... ஊரே கொண்டாடும் கருடன்! உள்ளுக்குள்ள கதறும் சூரி.. அட இப்படியெல்லாம் நடந்துச்சா? எங்க வீட்ல அப்ப வசதி கிடையாது. கேசட் […]

By :  sankaran v
Update: 2024-06-03 10:46 GMT

இளையராஜாவின் பாடல்களை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் பிரபலங்களும் விதிவிலக்கல்ல. இங்கு பிரபல இயக்குனர் மிஷ்கின் இளையராஜாவைப் பற்றி என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.

எங்க அப்பா சினிமா பாடல்கள்ல கண்டசாலா மாதிரி பாடுவாரு. எங்க அம்மா பி.சுசிலா மாதிரி பாடுவாங்க. ரொம்ப ஆச்சரியமா இருக்கும். அந்த மாதிரி சூழல்ல தான் வளர்ந்தேன்.

இதையும் படிங்க... ஊரே கொண்டாடும் கருடன்! உள்ளுக்குள்ள கதறும் சூரி.. அட இப்படியெல்லாம் நடந்துச்சா?

எங்க வீட்ல அப்ப வசதி கிடையாது. கேசட் வந்த காலகட்டத்துல கேசட் வாங்கிப் பாட்டுக் கேட்க முடியாது. பக்கத்து வீட்ல தான் கேக்கணும். அப்போ டேப்ரிக்கார்டர் பிளாட்டா இருக்கும். நிழல்கள் படத்தின் பாட்டு கேசட் காலைல 9 மணிக்கு ரிலீஸ் ஆச்சு. 10 மணிக்கு வாங்கிட்டு வந்தாங்க.

பக்கத்து வீட்ல எங்க ப்ரண்டு ஒரு அண்ணன் தான். அவரு போடுறாரு. அன்னைக்கு இரவு முழுவதும் கேட்டுக்கிட்டு இருந்தோம். சாப்பிடக்கூட இல்ல. வானமகள் நாணுகிறாள் என்ற அந்தப் பாடல் எல்லாம்.

இளையராஜாவை நான் ஆச்சரியமா மட்டும் பார்க்கல. என்னோட லைஃப்ல மீனிங்ஃபுல்லா இருந்தாரு. காதலுக்கு எம்எஸ்.வி. தேவைப்பட்டுச்சு. காதல் தோல்விக்கு இளையராஜா தேவைப்பட்டாரு. தமிழ்நாட்டோட மியூசிக்கிள் சைக்கேவை அவர் கிரியேட் பண்ணிருக்காரு. 40 வருஷமா. நம்ம எல்லாருக்குமே மியூசிக்கல் டெம்ப்ளேட் இருக்கு.

மிஷ்கின்

முதல் படத்துக்கு நான் இளையராஜா கிடைச்சாலும் போகக்கூடாதுன்னு நினைச்சேன். ஏன்னா என்னோட படைப்புல தான் நான் ரொம்ப நம்பிக்கையா இருந்தேன். அதுதான் ஜெயிக்கணும்னு நினைச்சேன். 2வது படம் நந்தலாலா. அந்தப் படத்துக்கு இளையராஜாவோடு ஒர்க் பண்ணினேன். மேற்கண்ட தகவலை பிரபல இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

1980ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் நிழல்கள். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே சுகம் தான். நிழல்கள் ரவி, ரோகிணி, ராஜசேகர், சந்திரசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் என்ன விசேஷம்னா உலகநாயகன் கமல் வீட்டிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.

இதையும் படிங்க... குட்டி இடுப்பு செம கும்தவா இருக்கு!.. வேதிகாவை ஜூம் பண்ணி ரசிக்கும் ரசிகர்கள்!…

கவிப்பேரரசர் வைரமுத்து அறிமுகமானதும் இந்தப் படத்தில் தான். அவர் எழுதிய இது ஒரு பொன்மாலை பாடல் செம மாஸாக இருக்கும். பூங்கதவே தாழ் திறவாய், மடை திறந்து, தூரத்தில் நான் கண்ட உன் முகம் உள்பட பல பாடல்கள் அருமையாக இருக்கும்.

Tags:    

Similar News