காதல் கவிதை எழுதுறேன்னு படுத்தி எடுக்கிறாய்ங்க!.. சிங்கிள்ஸை கலாய்த்த இயக்குனர் மிஸ்கின்…
தமிழில் சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். முதல் படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் அதனை தொடர்ந்து வெளியான அஞ்சாதே, யுத்தம் செய் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமானது.
அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவரானார் மிஸ்கின்.ஆனால் இடையில் வெளிவந்த முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்கள் பெரிதாக ஓடவில்லை.
அதற்குப் பிறகு அவர் இயக்கிய துப்பறிவாளன் மற்றும் பிசாசு ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
தற்சமயம் நடிகை ஆண்ட்ரியாவை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். மிஷ்கின் அதிகமாக புத்தகங்கள் படிக்கக் கூடியவர். தொடர்ந்து அவரது பேட்டிகளில் புத்தகங்கள் குறித்து அவர் பேசுவதை பார்க்க முடியும்,
மிஷ்கின் சொன்ன விளக்கம்:
இப்படி ஒரு பேட்டியில் பேசும்போது மிகவும் தனிமையாக உணர்பவர்கள் எந்த வகையான புத்தகங்களை படிக்கலாம் என ஒரு கேள்வியை மிஷ்கினிடம் கேட்டிருந்தனர். அதற்கு மிஷ்கின் பதில் அளிக்கும் போது யாருமே இங்கே தனிமையில் இல்லை.
நாம் அனைவருமே மக்களுக்கு மத்தியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம் ஒரு தோட்டத்தில் நின்றால் கூட அங்கு குருவிகளும் அணில்களும் இருக்கின்றன, இந்த உலகத்தில் யாருமே எங்குமே தனியாக இருப்பதில்லை. காதல் தோல்வியால் தனியாக இருக்கிறேன் என கூறுவார்கள். அப்படி ஒரு வேலை உங்களுக்கு தனிமையாக இருப்பதாக தோன்றினால் ஒரு பிச்சைக்காரனிடம் சென்று காசு கொடுத்துவிட்டு அவனிடம் பேசி விட்டு வாருங்கள் என கூறியிருந்தார்.
அதே போல காதல் செய்பவர்கள் கவிதை எழுதுவதற்கு எந்த வகையான புத்தகங்கள் படிக்கலாம் என கேட்டபோது “முதலில் அவங்க எழுதுறது எல்லாம் கவிதையே கிடையாது. கழுதை என கூறி கலாய்த்தார் மிஸ்கின்.”