உதவி இயக்குனராக சேர ஓடி வந்த பெண்ணை ஒரே சொல்லால் விரட்டிவிட்ட மணிரத்னம்!... ஆனால் அங்கதான் ஒரு டிவிஸ்டு…
மணிரத்னம் இந்திய சினிமாவின் மிகப்பெரிய இயக்குனராக திகழ்ந்து வருபவர் என்பதை பலரும் அறிந்திருப்போம். அப்படிப்பட்ட மணிரத்னம், தன்னிடம் உதவி இயக்குனராக சேர வந்த ஒரு பெண்ணை ஒரே சொல்லால் விரட்டிவிட்டிருக்கிறார். அதன் பின் அந்த பெண் மீண்டும் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்து பின்னாளில் தமிழ் சினிமாவின் முன்னணி பெண் இயக்குனராக ஆனார். அவர் யார்? என்பது குறித்தும் இச்சம்பவத்தை குறித்தும் இப்போதும் பார்க்கலாம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்று ஒரு பெண் வந்திருக்கிறார். அதற்கு மணிரத்னம், “போய் எதாவது பிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்சிட்டு வாங்க. கொஞ்சம் Basic ஆ தெரிஞ்சிக்கிட்டு வாங்க. அப்போதான் ஈசியா இருக்கும்” என கூறி அவரை அப்படியே அனுப்பிவிட்டாராம். அந்த பெண்ணோ ஒரு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்துவிட்டு மீண்டும் மணிரத்னத்திடம் வந்திருக்கிறார்.
அந்த சமயத்தில் சுஹாசினி மணிரத்னம் “இந்திரா” என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். உடனே சுஹாசினி அந்த பெண்ணை தன்னுடன் சேர்த்துக்கொண்டார். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக மணிரத்னத்திடம் உதவியாளராக சேர்ந்துவிட்டார். அதநை தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய பல திரைப்படங்களில் பணியாற்றிய அந்த பெண், ஒரு கட்டத்தில் தான் இயக்குனராக வேண்டும் என முடிவு எடுத்தார்.
அதன்படி ஒரு அசத்தலான கதையுடன் இயக்குனர் ஈ.ராமதாஸிடம் உதவி கேட்டு போயிருக்கிறார். அவரோ பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸில் இருந்த தயாரிப்பாளர் வெங்கட் சுபாவிடம் தொடர்புகொண்டு அவர் வழியாக பிரகாஷ் ராஜிடம் அந்த பெண்ணை கதை கூற அனுப்பியிருக்கிறார். ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய “இருவர்” திரைப்படத்தில் அந்த பெண் உதவி இயக்குனராக பணியாற்றியதால் பிரகாஷ் ராஜிற்கு அவரை தெரிந்திருந்தது.
அந்த பெண் கூறிய கதையும் பிரகாஷ் ராஜிற்கு பிடித்துப்போக, அவ்வாறு உருவான திரைப்படம்தான் “கண்ட நாள் முதல்”. அந்த பெண்ணின் பெயர்தான் வி.பிரியா. இவர் “கண்ட நாள் முதல்” திரைப்படத்தை தொடர்ந்து “கண்ணாமூச்சி ஏனடா”, என்ற திரைப்படத்தையும் தெலுங்கில் “ஆதி லட்சுமி புராணா” என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு பிரகாஷ் ராஜ் நடிப்பில் “ஆனந்தம்” என்ற வெப் சீரீஸை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பேய் படம்னு நினைச்சு ஓடிட்டாங்க!.. போன ரசிகர்களை எப்படி தியேட்டருக்கு வரவழைத்தார் தெரியுமா தாணு?