என் படம் கூட ஜெயிலரை கம்பேர் பண்ணாதீங்க.. கொந்தளித்த பாட்ஷா பட இயக்குநர்
ரஜினிகாந்த், ரகுவரன், நக்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான பாட்ஷா திரைப்படத்தை இன்று வரை யாரும் மறந்திருக்கவே மாட்டார்கள். இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார், தேவா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ஸ்டைலாகவும், அதே சமயம் மாஸாகவும் ரஜினி இருப்பார்.
இன்றுவரை இந்த படம் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படிங்க- இந்த முறை பின் வாங்குறதே இல்லை!.. அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!.. ஜெயிலர் மொத்த வசூல் இவ்ளோவா!..
இந்த படம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் பாட்ஷா பார்ட் 2 போல உள்ளது என்று ஒரு சிலர் கூறிவந்தனர். இதற்கு பாட்ஷா பட இயக்குநர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார். அதில் பாட்ஷா வேறு, ஜெயிலர் வேறு.
இந்த காலகட்டத்தில், பாட்ஷா வெளியாகியிருந்தால் படம் ஓடியிருக்காது. அதே போல தான் அந்த காலத்தில் ஜெயிலர் வந்தால் ஆகியிருக்கும். அந்த காலத்திற்கேற்ற காமெடி, ஆக்ஷன், கதை வைத்து எடுக்கப்பட்ட படம் பாட்ஷா. நான் ஜெயிலர் படம் பார்த்தேன்.
எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நெல்சன் மிக அருமையாக எடுத்திருக்கிறார். அதற்காக ஜெயிலரை பாட்ஷாவோடு கம்பேர் பண்ண வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். எந்த படத்தையும் வேறு படத்தோடு கம்பேர் செய்யக்கூடாது. படம் நன்றாக இருக்கிறது. இன்றைய ரசிகர்களின் மனநிலைக்கேற்ப எடுக்கப்பட்டிருக்கிறது.
ரஜினி 73 வயதில், மிக சிறப்பாக நடித்திருக்கிறார். படம் வெற்றி பெற்றுள்ளது. எனவே, இதனை பாட்ஷா படத்தோடு ஒப்பிட கூடாது. அந்த காலகட்டத்திற்கு ஏற்ற படம் பாட்ஷா என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அந்த பேட்டியில் பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க- 5 நாள் முழுக்க மரத்தின் மேலே நின்ற விஜயகாந்த்.. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணன் சொன்ன பகீர் தகவல்..