தலையில துண்ட போட்டு போக வேண்டியதுதான்! ரஜினி, விஜயின் செயலால் கடுப்பான கோடம்பாக்கம்
கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் இன்னும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருக்கிறார்களே தவிர தயாரிப்பாளர்களின் நிலைமையை யோசிப்பதில்லை. படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறுகிறதா என்பதை விட வசூல் ரீதியாக வெற்றியடைகிறதா என்பதை தான் பார்க்கிறார்கள்.
பெரிய நடிகர்களின் படங்களில் நல்ல கதைகளை பார்க்க முடியாது. அவர்களை வைத்து பெருமளவு சம்பாதிக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். விஜய், அஜித், கமல், ரஜினி இவர்களின் சமீபகால படங்களை எடுத்துக் கொண்டால் கதையில் ஏதாவது வித்தியாசத்தை பார்த்திருக்கிறோமா? இல்லை. நல்ல வசூல் வேட்டை அள்ளியது தான் மிச்சம்.
இதையும் படிங்க : அரவிந்த்சாமி அப்பாக்கு ரஜினி கொடுத்த மரியாதை! வாயடைத்து நின்ற ‘மெட்டிஒலி’ சிதம்பரம்
இந்த நிலையில் அந்த பெரிய நடிகர்களுக்கு தன் படங்கள் எந்தளவுக்கு வசூலாகின்றன என்பதை பற்றி ஒரு புரிதல் பிறந்து விடுகின்றது. இதை வைத்தே அவர்கள் வேறொரு ரூட்டில் சம்பாதிக்க முடிவெடுத்து விடுகின்றனர். உதாரணமாக ரஜினி இந்த ஜெய்லர் திரைப்படத்திற்காக வாங்கிய சம்பளம் 100கோடிதான். ஆனால் அந்தப் படத்தின் மூலம் வரும் லாபத்தில் ஒரு பங்கை தனக்கு கொடுக்க வேண்டும் என சொல்லியே நடித்திருக்கிறார்.
தோராயமாக அந்த லாபத்தில் 110 கோடி ரூபாயை செக்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் கொடுத்திருப்பதாக தெரிகிறது. ஆக மொத்தம் ஜெய்லர் படத்திற்காக 210 கோடி ரூபாயை ரஜினி பெற்றிருக்கிறார் என சொல்லப்படுகிறது. அதே போல் விஜயும் தனது அடுத்தப் படத்திற்காக
ஏஜிஎஸ் நிறுவனத்திடம் தனக்கு சம்பளமாக 100 கோடியும் வர லாபத்தில் 50 சதவீதம் பங்கும் வேண்டும் என கேட்டிருக்கிறார்.
இதையும் படிங்க : வீணா சிம்புவை சீண்டி பல கோடி போச்சி!.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்!..
ஆனால் சுதாரித்துக் கொண்ட ஏஜிஎஸ் நிறுவனம் விஜய் சொல்வது மாதிரி செய்தால் மொத்தம் 250 கோடி விஜய்க்கு கொடுக்க வேண்டி வரும் என்பதால் சம்பளமாக 200 கோடி தருகிறோம் என பேசி முடித்திருக்கிறார்கள். இதே போல விஷ்ணு விஷாலும் இறங்கியிருக்கிறாராம். இதை பற்றி
பேசிய வலைப்பேச்சு அந்தனன் இப்படியே எல்லா நடிகர்களும் வந்தால் தயாரிப்பாளர்களின் நிலைமை என்னவாகும்?
அங்க இங்க கடனை வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இதை வைத்து தான் பிழைக்கவே செய்கிறார்கள். அப்படி இருக்கும் போது ரஜினி, விஜய் போன்ற நடிகர்கள் இதை மாதிரி செய்வது சினிமாவிற்கு நல்லது இல்லை என்று கூறினார். மேலும் காசு இருக்கிற தயாரிப்பாளர்களுக்கு ஒரு பிரச்சினையும் இருக்காது. ஆனால் சிறு தயாரிப்பாளர்களின் நிலைமை?’' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.