இந்த அழக எப்படித்தான் மெயிண்டெய்ன் பண்றாங்களோ!.. கட்டழக காட்டி இழுக்கும் பிரியாமணி!..
Priyamani: பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் பிரியாமணி. துவக்கத்திலேயே பெரிய இயக்குனர்கள் படத்தில் நடித்தார். பாலுமகேந்திரா தனுஷை வைத்து இயக்கிய அது ஒரு கனா காலம் படத்திலும் நடித்திருந்தார். அதன்பின் சில படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படத்தில் முத்தழகாகவே வாழ்ந்திருந்தார். இந்த படத்தில் அவரின் நடிப்புக்கு தேசிய விருதே கிடைத்தது. தேசிய விருது பெற்றாலும் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதை ஒரு பேட்டியில் வருத்தத்துடன் பிரியாமணியே கூறினார். தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இல்லாததல் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்க துவங்கினார். அந்த மொழி படங்களில் பிகினி உடைகளிலெல்லாம் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.
ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். சில வருடங்கள் டிவி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக கலந்து கொண்டார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியிருக்கிறார். அவ்வப்போது கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றார்.
அந்தவகையில், புடையில் கட்டழகை காட்டி பிரியாமணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை பெற்று வருகிறது
.