படம்தான் ஓடல!.. போட்டோவ போடுவோம்!.. கிளாமரில் அதிர வைக்கும் அதிதி ஷங்கர்!...
Aditi Shankar: இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இவருக்கு டாக்டருக்கு படிக்க வைத்தார் ஷங்கர். ஆனால், நான் நடிகையாக ஆசைப்படுகிறேன் என அப்பாவிடம் அடம்பிடித்து சினிமாவுக்கு வந்துவிட்டார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்த விருமன் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
இந்த படம் வழக்கம்போல முத்தையா ஸ்டைலில் உருவாகியிருந்தது. கிராமத்து கதை என்றாலும் தனது நிறத்தை கொஞ்சம் கருப்பாக்கி நடித்தார் அதிதி. அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் நடித்தார். இதில் ஒரு சென்னை மார்டன் கேர்ள் வேடம். அதற்கு அதிதி கச்சிதமாக பொருந்தியிருந்தார்.
அதோடு, இந்த படத்தில் நன்றாகவும் நடித்திருந்தார். மாவீரன் படம் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பி மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் நடிப்பில் உருவான ‘நேசிப்பாயா’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தை அஜித்தை வைத்து பில்லா படத்தை இயக்கிய விஷ்ணு வர்தன் இயக்கியிருந்தார்.
பொங்கலுக்கு வெளியான இந்த திரைபப்டம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்துவிட்டது. இந்த படம் 50 கோடி செலவில் உருவானதாக சொல்லப்பட்டது. ஆனால், 2 கோடிகளை கூட வசூலிக்காமல் படுதோல்வி அடைந்திருக்கிறது. ஒருபக்கம் ஒன்ஸ்மோர் என்கிற படத்திலும் அதிதி நடித்து முடித்திருக்கிறார். மேலும், பைரவம் என்கிற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
அவ்வப்போது அழகான உடைகளை அணிந்து போட்டோஷுட் செய்து சமூகவலைத்தளங்களில் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அதிதி ஷங்கரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.