சுடர்மணி ஜட்டி விளம்பரம்!.. சூர்யா பட நடிகை என்ன இப்படி இறங்கிட்டாரு!.. இண்டர்நெட்டே பத்திக்கிச்சு!

கங்குவா படத்தின் மூலம் கோலிவுட்டில் அடுத்த மாதம் காலடி எடுத்து வைக்கவுள்ள பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கெல்வின் கிளெய்ன் ஜட்டி விளம்பரத்துக்காக புதிதாக போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

By :  saranya
Update: 2024-10-03 15:30 GMT

பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி சூர்யாவுக்கு ஜோடியாக கங்குவா படத்தில் நடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் அடுத்த மாதம் நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.

இந்த ஆண்டு துவக்கத்தில் கங்குவா திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்டோபர் 10ம் தேதி கங்குவா வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே தேதியில் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், போட்டியை தவிர்க்கும் விதமாக கங்குவா தனது ரிலீஸ் தேதியை மாற்றிக் கொண்டது. 


பாலிவுட் நடிகை திஷா பதானி கங்குவா படத்தில் நடித்துள்ள நிலையில், அந்த படத்தின் ரிலீஸுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி படத்திலும் திஷா பதானி தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படம் 1000 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில் அதேபோல கங்குவார் திரைப்படமும் 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. 


இந்நிலையில் நடிகை திஷா பதானி புதிதாக ஜட்டி விளம்பரத்தில் நடித்துள்ள புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இன்டர்நெட்டையே தீப்பிடிக்க செய்துள்ளார்.

சர்வதேச அளவில் பிரபலமான கெல்வின் கிளெய்ன் உள்ளாடை நிறுவனத்தின் தூதுவராக பல வருடங்களாக திஷா பதானி செயல்பட்டு வரும் நிலையில் அடிக்கடி ஜட்டியோடு போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் ரசிகர்களை திக்கு முக்காடு செய்து வருகிறார். 


நடிகை திஷா பதானிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 61 மில்லியன் ரசிகர்கள் அதாவது சுமார் 6 கோடி ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்கி படத்தில் பெரிதாக கவர்ச்சி காட்டாமல் நடித்த திஷா பதானி கங்குவா படத்தில் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார் என பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Tags:    

Similar News