தளதளன்னு தக்காளி பழம் போல இருக்க!.. அழகை வளச்சி வளச்சி காட்டும் கயாடு லோஹர்!...
Kayadu lohar: அசாமை சொந்த மாநிலமாக கொண்டவர். புனேவில் வசித்து வருபவர். மாடல் அழகி, நடிகை என வலம் வருபவர். பி.காம் பட்டதாரியான இவர் கல்லூரி படிப்புக்கு பின் மாடலிங் துறையில் நுழைந்தார். சில ஜுவல்லரி கடை விளம்பரங்களிலும் நடித்தார். மேலும் அழகிப்போட்டிகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அதன்பின் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இவருக்கு ஏற்பட்டது.
முதன் முதலில் இவர் நடித்தது ஒரு கன்னட படத்தில்தான். அதன்பின் ஒரு மலையாள படத்தில் நடித்தார். அது ஒரு பீரியட் படமாக வெளிவந்தது. அதன்பின் அல்லுரி எனும் தெலுங்கு படத்திலும், I Prem U என்கிற மராத்தி படத்திலும் நடித்தார். ஆனால், தமிழில் நடிக்க வந்தபோதுதான் கயாடு லோஹர் பிரபலமானார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த இந்த படத்தில் கயாடு லோஹர் நடித்தபோதே இவரின் புகைப்படங்கள் டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கியது. எங்கு பார்த்தாலும் கயாடு லோஹரே கண்ணில் பட்டார். இதையடுத்து நெகிழ்ந்து போன கயாடு ரசிகர்களுக்கு நன்றி சொல்லி வீடியோவே போட்டார்.
அப்படி வெளியான டிராகன் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் மெகா வெற்றி காயாடு லோஹரை மார்க்கெட் உள்ள நடிகையாக மாற்றிவிட்டது. எனவே, காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிற பழமொழிக்கு ஏற்றவாறு புது படங்களில் நடிக்க அழைத்தால் ஒன்றரை கோடி வரை சம்பளம் கேட்கிறார். அதர்வாவுடன் இதயம் முரளி என்கிற படத்திலும் நடித்திருக்கிறார்.
இதுபோக சிம்பு நடிக்கும் புதிய படம் உள்ளிட்ட சில படங்களிலும் நடிக்கிறார். இளம் ஹீரோக்களின் புதிய படங்கள் என்றாலே கயாடு லோஹருக்கு வாய்ப்பு போகும் அளவுக்கு இவருக்கு மார்கெட் இருக்கிறது. ஒருபக்கம், மார்க்கெட்டை தக்க வைப்பதற்காக கவர்ச்சியாக உடையணிந்து போட்டோக்களை வெளியிடு வருகிறார்.